என் வெற்றிக்கு நானே காரணம்!! சச்சின், தோனியை விளாசுகிறாரா முகமது சமி?? 1

ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சமி, தனது இந்த அபாரமான செயல்பாட்டிற்குப் தானே காரணம் என மார்தட்டிக் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களாக இந்திய ரசிகர்களிடையே சச்சினா? தோனியா? என்கின்ற விவாதம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. ஒருபுறம் தோனி கொடுத்த டிப்ஸில் தான் முகமது சமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் என பேசப்படுகிறது. மறுபுறம் அனுபவம் மிக்க தோனி ஆடியது சரி இல்லை என விமர்சித்த சச்சினை சரி என புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

என் வெற்றிக்கு நானே காரணம்!! சச்சின், தோனியை விளாசுகிறாரா முகமது சமி?? 2

இதற்கிடையில், கடந்த சில வருடங்களாக தனது சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளையும் பொருட்படுத்தாமல்  பயிற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தி தனது வேகத்திலும் முன்னேற்றம் கண்டுள்ள முகமது சமி ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளுக்கு எதிராகவும் மிகச் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு வித்திட்டார். இத்தகைய சிறப்பான செயல்பாட்டிற்காக முகமது சமிக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்காமல் போனது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்தினை தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து பேட்டியளித்த முகமது சமி கூறுகையில், “என்னுடைய இத்தகைய சிறப்பான செயல்பாட்டிற்கு நான் மட்டுமே காரணம் என நினைக்கிறேன். சுயபெருமை பேசுவதற்காக கூறவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக என் வாழ்க்கையில் நடந்தவற்றை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

என் வெற்றிக்கு நானே காரணம்!! சச்சின், தோனியை விளாசுகிறாரா முகமது சமி?? 3

அவற்றைப் பொருட்படுத்தாமல், எனது பந்துவீச்சில் முழு கவனம் செலுத்தி பிசிசிஐ இன் கவனத்தை ஈர்த்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றேன். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் செல்லவிருக்கும் நேரத்தில் யோயோ உடற்பகுதியில் தோல்வியுற்றேன். இருப்பினும் மீண்டும் ஒருமுறை கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு யோயோ பயிற்சியில் தேர்ச்சி பெற்று மீண்டும் அணியில் இணைந்தேன்.

ஐபிஎல் தொடரும் எனக்கு சிறப்பாக அமைந்தது விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் வேகத்தை அதிகரிக்க உதவியது. இப்படி நான் தன்னிச்சையாக செயல்பட திடமான மன நிலையை கொடுத்த அந்த இறைவனுக்கே நன்றி கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நிச்சயம் வரும் போட்டிகளிலும் இதேபோன்று சிறப்பாக செயல்படுவேன் என்று குறிப்பிட்டார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *