ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பிரபல கிரிக்கெட் வல்லுநர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் வலுவான அணியை கட்டமைக்க வேண்டும் என்று அனைத்து அணிகளும் போட்டி போட்டு தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுத்தது.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான தனது அணியில் மேக்ஸ்வெல்,விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரை மட்டும் தக்க வைத்தது, இதனால் பெங்களூரு அணி 2022 ஐபிஎல் தொடர் ஏலத்தில் ஏற்கனவே பெங்களூரு அணியில் விளையாடிய வீரர்களை எடுக்காமல் புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பெங்களூரு அணி ஹர்சல் படேல்,ஹசரங்கா போன்ற ஏற்கனவே அணியில் விளையாடிய வீரர்களை பல கோடி கொடுத்து அணியில் இணைத்தது இதற்கு பெங்களூரு அணி இவர்களில் ஒருவரை தக்க வைத்திருந்தால் 5 கோடி வரை சேமித்து இருக்கலாம். ஏன் இவர்களை பெங்களூர் அணி நீக்கியது பின் மீண்டும் ஏன் அணியில் இனைத்தது என்று பெங்களூரு அணிக்கே தெரியவில்லை. பெங்களூர் அணியின் இந்த செயலால் சமூக வலைதளங்களில் ‘இதற்கு பருத்தி மூடை குடோனிலே இருந்திருக்கலாம்’ என்பது போல் மீம்ஸ் மெட்டீரியலாக மாறிவிட்டது.
இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்காண பெங்களூரு அணி முழுமை பெறாமல் பரிதாப நிலையில் இருப்பதாக சில கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பெங்களூர் அணியில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய வீரர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “பெங்களூர் அணி 2022 ஐபிஎல் தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரூதர்போர்டை வாங்கியுள்ளது, ரூதர்போர்டு லோயர் மிடில் ஆர்டர்களில் விளையாடக் கூடியவர். தற்போது கேள்வி என்னவென்றால் பெங்களூர் அணிக்காக நான்காவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய வீரர் யார் என்பதுதான், துவக்க வீரராக டுப்லஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இரு வீரர்களும் களமிறங்குவார்கள். இவர்களை அடுத்து மூன்றாவது இடத்தில் மேக்ஸ்வெல் விளையாடுவார், ஆனால் நான்காவது இடத்தில் விளையாடுவதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லை, இதன் காரணமாக பெங்களூரு அணி அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்,சபாஷ் அகமது ஆகிய வீரர்களை தான் விளையாடவைக்க வேண்டும். அப்படி பெங்களூரு அணி செய்தால் இது பலம் வாய்ந்த அணியாக இருக்குமா என்று தெரியவில்லை. அதேபோன்று பெங்களூரு அணி செய்த மற்றுமொரு தவறு, அனுபவம் வாய்ந்த இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுக்கவில்லை” என்றும் ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.