டெஸ்ட் போட்டிகளில் இவர் தான் துவக்க வீரர்; அடித்து சொல்லும் ஆகாஷ் சோப்ரா !! 1

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் மற்றும் கிரிக்கெட் வல்லுனருமான ஆகாஷ் சோப்ரா மாயக் அகர்வாலுக்கு பிரித்விஷாதான் ஏற்ற துவக்க ஜோடி என்று தெரிவித்துள்ளார்.

வருகிற டிசம்பர் 17 நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதில் கே எல் ராகுல் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் இதனால் பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இவர் தான் துவக்க வீரர்; அடித்து சொல்லும் ஆகாஷ் சோப்ரா !! 2

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டி துவக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் அகர்வால் களமிறங்கினர் இவர்களுடைய நிதானமான ஆட்டம் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது பின் மிடில் ஆடர் களின் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டார். இதனால் இந்திய அணி அதிக ரன்களை சேர்த்தது இதில் பிரித்வி ஷா 29 பந்துகளை சந்தித்து 40 ரன்களை அடித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இவர் தான் துவக்க வீரர்; அடித்து சொல்லும் ஆகாஷ் சோப்ரா !! 3
)

ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது ப்ரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் பந்தயக் குதிரை போன்று யார் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்பதில் போட்டி போட்டுக் கொண்டு உள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் இவர் தான் துவக்க வீரர்; அடித்து சொல்லும் ஆகாஷ் சோப்ரா !! 4

என்னை பொருத்தவரை மாயக் அகர்வாலுடன் பிரித்வி ஷா துவக்க வீரராக களமிறங்குவது அணிக்கு பலமாக அமையும் மேலும் மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சுப்மன் கில் தனது முதல் இன்னிங்சில் 43 பந்துகளுக்கு 58 ரன்களை எடுத்திருந்தார என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *