உள்ளூர் போட்டிகள் ஆடாமல் ஐபிஎல் மட்டும் ஆடிட்டு வந்தால் இப்படித்தான்.. அர்ஷதீப் சிங் இன்டர்நெஷனல் பவுலரே இல்லை - முன்னாள் வீரர் சாடல்! 1

அர்ஷதீப் சிங் எதற்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என பேசியுள்ளார் சபா கரீம்.

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 தொடரில் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றது. ஒரு கட்டத்தில் 15 ஓவர்களுக்கு 129 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

கடைசி ஐந்து ஓவர்களில் 77 ரன்களை வாரிக்கொடுத்திருக்கின்றனர் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷதீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் சிவம் மாவி. இதில் அர்ஷதீப் சிங் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசி 37 ரன்களை விட்டுக் கொடுத்தார். அத்துடன் ஐந்து நோபால்கள் வீசியுள்ளார்.

உள்ளூர் போட்டிகள் ஆடாமல் ஐபிஎல் மட்டும் ஆடிட்டு வந்தால் இப்படித்தான்.. அர்ஷதீப் சிங் இன்டர்நெஷனல் பவுலரே இல்லை - முன்னாள் வீரர் சாடல்! 2

ஒரு டி20 போட்டியில் ஐந்து நோபால்கள் வீசிய ஒரே வீரர் என்ற மோசமான சாதனையையும் தன் வசப்படுத்தினார். மேலும் டி20 போட்டிகளில் அதிக நோபால்கள் வீசியவர்கள் பட்டியலில் 14 நோபால்களுடன் முதல் இடத்திலும் இருக்கிறார்.

அர்ஷதீப் சிங், நன்றாக செயல்பட்டு வந்தாலும் நோபால் மற்றும் ஒயிட் ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக சில போட்டிகளில் அவருக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது.

இந்நிலையில் அர்ஷதீப் சிங் பற்றி சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம்.

உள்ளூர் போட்டிகள் ஆடாமல் ஐபிஎல் மட்டும் ஆடிட்டு வந்தால் இப்படித்தான்.. அர்ஷதீப் சிங் இன்டர்நெஷனல் பவுலரே இல்லை - முன்னாள் வீரர் சாடல்! 3

“சர்வதேச போட்டிகளுக்கு இடையே ஓய்வு கிடைக்கும்பொழுது, ஏன் அர்ஷதீப் சிங் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை? விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணிக்காக ஏன் விளையாடவில்லை?.

டி20 உலககோப்பையில் பும்ரா இல்லாத நேரத்தில் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார். ஒரு சில போட்டிகளில் செய்த தவறால் வெளியேற்றி விட முடியாது. அணி நிர்வாகம் இவரை போன்ற இளம் வீரரை பொறுமையுடன் அணுக வேண்டும். இவர் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் அதை சரி செய்து கொள்வதற்கு பவுலிங் பயிற்சியாளர் அவருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். அணி நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும்.” என்றார்.

உள்ளூர் போட்டிகள் ஆடாமல் ஐபிஎல் மட்டும் ஆடிட்டு வந்தால் இப்படித்தான்.. அர்ஷதீப் சிங் இன்டர்நெஷனல் பவுலரே இல்லை - முன்னாள் வீரர் சாடல்! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *