இந்திய வீரர்களை மற்ற நாட்டின் டி20 போட்டிகளில் பிசிசிஐ நிர்வாகம் அனுமதி தர மறுத்து வருகிறது. இது மற்ற கிரிக்கெட் வாரியங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆனால், மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் வெளிநாடுகளின் டி20 லீக் போட்டிகள் ஆடுவதற்கு எந்தவித தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால், இந்த விஷயத்தில் பிசிசிஐ நிர்வாகம் கெடுபிடியாக உள்ளது.
இந்த முடிவு, வீரர்களை மற்ற நாட்டின் மைதானத்தின் நிலை அறிய விடாமலும், அதற்கு ஏறாற்போல் தம்மை தயார் படுத்த விடாமலும் செய்கிறது. மேலும், சில வீரர்கள் பணம் சம்பாதித்து வாழ்க்கைமுறையை மேம்படுத்தவும் முட்டுக்கட்டையாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெளியில் சென்று சிறப்பாக ஆடி தேர்வுக்குழுவை தன் பக்கம் ஈர்க்க முடியாமலும் போகிறது.
க்ருனால் பாண்டியா, சஞ்சு சாம்சன், மயங்க் அகர்வால் ஆகியோரும் தன் முழு திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். மூத்த வீரர்களின் அணியில் இடம்பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வலை பயிர்ச்யில் ஈடுபடுவதைவிட பேக்கி நாடுகளுக்கு சென்று போட்டிகளில் ஆடி கற்றுக்கொள்வது மிகவும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும்.
அஸ்வின், ஜடேஜா போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் சென்ற ஆண்டிலிருந்து லிமிடெட் ஓவர் போட்டிகளில் இடம்பெற முடியாமல் தவித்து வருகின்றனர். வெளியில் சென்று ஆடினால் மற்ற நாட்டின் நிலை அறிய மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
ஐபில் போட்டியின் பாரம்பரியம் காக்கவே பிசிசிஐ நிர்வாகம் அவர்களை வெளியில் அனுமதிப்பதே இல்லை. இந்திய வீரர்கள் இங்கேயே ஆடுவதால் தான் மற்ற நாட்டின் முக்கிய வீரர்களும் இங்கு வந்து தங்கள் பங்களிப்பை கொடுக்க விரும்புகின்றனர். இந்த வடிவமைப்பை காக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ நிர்வாகம் தெளிவாக இருக்கின்றது.
ஆனால், ஐபில் தொடரின் முக்கிய அம்சம் வீரர்களை மேம்படுத்துவது. அவர்களை வெளியில் செல்ல அனுமதித்தால் தான் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை ஏன் கருத்தில் கொள்வதில்லை என்பதும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எப்பொழுது மாற்றம் வரும் என்று.