தரமான வீரர்களை வைத்திருப்பதால் மட்டுமே ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் வெற்றி கேப்டனாக திகழ்கிறார் என்ற விமர்ச்சனத்திற்கு ரோஹித் சர்மாவே சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் 13வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் ஆளாக வெளியேறவே, ஐபிஎல் தொடரின் மற்றொரு ஜாம்பவனான மும்பை இந்தியன்ஸ் அணியோ அசால்டாக ஐந்தாவது முறை சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது.

ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு அதிகமான பாராட்டுக்கள் குவிந்த நிலையில், மறுபுறம் உலகின் தலைசிறந்த வீரர்களை வைத்திருப்பதன் காரணமாகவே ரோஹித் சர்மாவால் ஐபிஎல் தொடரின் வெற்றி கேப்டனாக திகழ முடிகிறது என்றும், பெங்களூர் போன்ற ஒரு அணியை வைத்து ரோஹித் சர்மாவால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியுமா..? என்றும் முன்னாள் வீரர்கள் பலர் ரோஹித் சர்மாவை விமர்சிக்கும் வகையிலும் பேசி வந்தனர்.

இந்தநிலையில், இந்த விமர்ச்சனத்திற்கு ரோஹித் சர்மாவே தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “நான் வேறு அணியை வழிநடத்தினால் இதேபோன்று வெற்றிகரமாக வழிநடத்தியிருக்க முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். ஓவர்நைட்டில் வளர்ந்த டீம் அல்ல மும்பை இந்தியன்ஸ். மும்பை அணி தேவையில்லாத, ஏராளமான மாற்றங்களை செய்ய விரும்பாது. ரோஹித் சர்மா உட்பட அனைத்து வீரர்களுமே ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள் தான். மும்பை அணி வீரர்களை ஏலத்தில் எடுத்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அணியை கட்டமைத்தது மும்பை அணி என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.

காயம் குறித்து…
தனக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், ““என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு விஷயத்தை மாட்டும் நான் சொல்லியாக வேண்டும். எனது காயம் குறித்து பிசிசிஐ-க்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தெளிவாக சொல்லியிருந்தேன். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எனக்குள் நம்பிக்கை இருந்ததால் சில நாட்களில் காயம் சரியானதும் விளையாட தொடங்கினேன். இப்போது NCAவுக்கு வந்திருப்பது லாங்கர் பார்மெட்டில் விளையாடவும் நான் ஃபிட் என்பதை நிரூபிப்பதற்காக தான். எனக்கு ஏற்பட்ட காயமும் தற்போது சரியாகிவிட்டது, இன்னும் சில பயிற்சிகள் மட்டுமே தேவை” என்றார்.