இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆடி வருகிறது. முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது.

Photo by Vipin Pawar / Sportzpics for BCCI
அடுத்ததாக, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியை துவம்சம் செய்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணிகளும் களம் இறங்குவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு துவக்க வீரர்கள் லீவிஸ், சிம்மன்ஸ் இருவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். நடுவரிசையில் ஹெட்மயர், கிங் மற்றும் கேப்டன் பொல்லார்ட் மூவரும் நிதானத்துடன் கூடிய அதிரடியை வெளிப்படுத்த கூடியவர்கள்.
கீழ் வரிசையில் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் எளிதாக சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசக்கூடியவர் என்பதால், விண்டீஸ் அணி பந்துவீச்சில் மட்டுமே மாற்றங்கள் கொண்டுவர முயற்சிக்கும்.
மும்பை மைதானம் வேகப்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிற்கும் சாதகமாக இருக்கின் என்பதால் ஆல்ரவுண்டர் கீமோ பால் உள்ளே வர அதிர வாய்ப்புகள் உள்ளது. வில்லியம்ஸ் இன்றைய போட்டியில் நீக்கப்படலாம்.