வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.
மார்ச் 16 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் அடித்து அசத்தியது, இதில் இங்கிலாந்து அணிக்காக அதிகபட்சமாக ஜோ ரூட் (153), பென் ஸ்டோக்ஸ்(120), லாரன்ஸ் (91) ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தனர்.

இதற்கு பின் தனது 2வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் அடித்துள்ளது,இதில் பிரத்வெய்ட் (109*), பிளாக்வுட் (102) ரன்கள் அடித்து அசத்தியுள்ளனர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் இரண்டாவது நாள் போட்டியில் ஜோ ரூட்வுடன் இணைந்து100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடி சிக்சர் ஒன்று அடித்து டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் இணைந்துள்ளார் .

அதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்கள் அடித்த ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் பென் ஸ்டோக்ஸ் 5 வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டி 5000 மேற்பட்ட ரன்கள் மற்றும் 100 விக்கெட்களை வீழ்த்திய 5 வீரர்கள்
கார்பில்ட் சோபர்(93டெஸ்ட்)-8032 ரன்கள் மற்றும் 235 விக்கெட்
இயான் போதம்(102 டெஸ்ட்)-5200 ரன்கள் மற்றும் 383 விக்கெட்
கபில் தேவ் (131டெஸ்ட்)- 5248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்
ஜாகஸ் காலிஸ்(166 டெஸ்ட்)-13289ரன்கள் மற்றும் 292 விக்கெட்
பென் ஸ்டோக்ஸ்(78 டெஸ்ட்)-5005 ரன்கள் மற்றும் 170 விக்கெட்