அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்குமா..? இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

இந்தியா விண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்குமா..? இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை (24-7-22) நடைபெற உள்ளது.

கடந்த போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வரை வந்த விண்டீஸ் அணி, இரண்டாவது போட்டியிலும் வெற்றிக்காக போராடும் என்பதால், இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்குமா..? இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால், அதே ஆடும் லெவனுடனே இந்திய அணி இரண்டாவது போட்டியையும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியை போலவே பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஷிகர் தவான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு இடம் கிடைக்கும்.

ஆல் ரவுண்டர்களாக அக்‌ஷர் பட்டேல், தீபக் ஹூடா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்குமா..? இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது சிராஜ், பிரசீத் கிருஷ்ணா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு இடம் கிடைக்கும்.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ஷிகர் தவான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *