"தினேஷ் கார்த்திக்?, ரிஷப் பண்ட்?"இருவரில் யாருக்கு உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா இடம் கொடுப்பார்? - முன்னாள் வீரர் பதில்! 1

தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரில் யார் உலக கோப்பை பிளேயிங் லெவனில் இருப்பர் என்று வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

டி20 உலக கோப்பை செல்லும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ராகுல், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷபன்ட் ஆகியோரில், கே எல் ராகுல் நிச்சயம் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. ஏனெனில் அவர்தான் துணை கேப்டன் மற்றும் துவக்க வீரர். ரோகித் சர்மா, கேஎல் ராகுல் இந்திய அணியின் துவக்க வராக களமிறங்குவார். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தனது பேட்டியிலும் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

"தினேஷ் கார்த்திக்?, ரிஷப் பண்ட்?"இருவரில் யாருக்கு உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா இடம் கொடுப்பார்? - முன்னாள் வீரர் பதில்! 2

தற்போது விவாதம் ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருப்பார் என்பதை பற்றி மட்டுமே நிலவி வருகிறது இதற்கு சுனில் கவாஸ்கர், கௌதம் கம்பீர், கபில்தேவ் ஆகியோர் தங்களது பதிலை கொடுத்து வந்தனர். அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வாஷிம் ஜாபர் தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார்.

“இனியும் ரிஷப் பண்ட் ஒரு இளம் வீரர் என்று கூறுகிறார்கள். அது தவறு. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மைதானங்களில் கச் சிறப்பாக விளையாடினார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது டி20 போட்டிகளில் சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். கடந்த சில தொடர்களாக இவரது ஆட்டம் தேக்கம் அடைந்திருந்தாலும், இவரை ஒதுக்கி விட முடியாது. அந்த அளவிற்கு தரமான பேட்ஸ்மேன் ஆவார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இவர் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்யக்கூடியவர். அந்த வகையில் எப்பேர்ப்பட்ட சூழலிலும் ரிஷப் பண்ட் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும்.” என்றார்.

"தினேஷ் கார்த்திக்?, ரிஷப் பண்ட்?"இருவரில் யாருக்கு உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா இடம் கொடுப்பார்? - முன்னாள் வீரர் பதில்! 3

தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்றால், நான் முதலில் ரிஷப் பண்ட்டை கருத்தில் கொள்வேன். அதன் பிறகு மைதானத்திற்கு ஏற்றவாறு தினேஷ் கார்த்திக் விளையாடலாமா?வேண்டாமா? என்பது பற்றி யோசிப்பேன். ஏனெனில் மைதானத்தில் பந்துவீச்சின் தேவை அதிகமாக இருந்தால், தினேஷ் கார்த்திக் வெளியில் அமர்த்தப்பட்டு கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை உள்ளே எடுத்து வருவேன். இப்படித்தான் எனது மாற்றம் இருக்கும். என்னை பொருத்தவரை, ரிஷப் கட்டாயம் இருக்க வேண்டும். ஐந்தாவது அல்லது நான்காவது இரண்டில் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்யட்டும். ஏனெனில் சூரியகுமார் யாதவ் அணியில் இருப்பார்.” என்று கருத்து தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.