இது நடந்தால் மட்டுமே கல்யாணம் செய்து கொள்வேன்; நடிகர் விஷால் பாணியில் சபதம் ஏற்ற ரசீத் கான்
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற பிறகே தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரசீத் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுகமான ரசீத் கான், ஆஃப்கானிஸ்தான் அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்து வருவதோடு, சமகால கிரிக்கெட் உலகின் முக்கிய வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
வெறும் 21 வயது இளைஞரான ரசீத் கான், தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். சமீபகாலமாக பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ரசீத் கான், நிச்சயமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் எதிர்காலமாகவே பார்க்கப்படுகிறார்.

சமீபத்தில் தனது தாயை இழந்த ரசீத் கான், தாயை இழந்த வேதனையில் இருந்து மீண்டு வந்த கையோடு பல்வேறு விசயங்கள் குறித்து தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் ரசீத் கான் சமீபத்தில் கொடுத்த பேட்டில் ஒன்றில் , ஆஃப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்ற பிறகே தான் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்ற பிறகே தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ள ரசீத் கான், அது டி.20 உலகக்கோப்பையா அல்லது ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையா என்பது குறித்து ரசீத் கான் தெளிவாக கூறவில்லை.
நம்ம ஊர் நடிகரான விஷால் இதே போல் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற சபதம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.