இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு வந்தால், இரண்டு கையால் பிடித்து கொள்வேன் – ரோகித் சர்மா

இந்தியன் பிரீமியர் லீக் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவின் வரை அனைத்துமே மும்பை இந்தியன்சுக்கு எதிராகவே இருந்தது.

20 ஓவர் முடிவில் புனே அணிக்கு எதிராக 129 மட்டுமே அடித்தார்கள். இந்த சீசனில் புனே அணியிடம் மூன்று முறை தோல்வியை கண்டது மும்பை அணி, இதலயே பாதி போட்டியை கோட்டை விட்ட்டார்கள்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை இழக்காமல் இருந்தனர். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபில் கோப்பையை வென்றது. மூன்று முறையும் ரோகித் சர்மா தலைமையில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, இந்த போட்டியை வென்றதற்கு எங்கள் பந்துவீச்சாளர்கள் தான் காரணம் என கூறினார்.

கடைசி 3 ஓவரில் புனே 30 ரன் அடிக்கவேண்டும் என்ற கட்டத்தில் தான் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வந்தது என கூறினார். கடைசி 3 ஓவரில் பும்ரா, மலிங்கா மற்றும் ஜான்சன் ஆகிய பந்துவீச்சாளர்கள் வர, 128 ரன்னுள் புனே அணியை நிறுத்தியது.

“கடைசி 3 ஓவர் இருக்கும்போது எனக்கு பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வந்தது. அவர்கள் சிறந்த பந்துவீச்சாளர்கள். நான் அவர்களுக்கு சுதந்திரம் அளித்து விட்டேன். உங்களுக்கு எங்கு பீல்டர்கள் வேண்டுமோ, அங்கே நிக்க சொல்லுங்க என மட்டும் தான் சொன்னேன்,” என ரோகித் சர்மா கூறினார்.

இந்த தொடர் முழுவதும் பல பாராட்டு பரிசுகளை பெற்று வருகிறார் ரோகித் சர்மா. உங்களுக்கு இந்திய அணியின் கேப்டனா வருவீங்கன்னு நம்பிக்கை இருக்கானு கேட்ட போது, “அதை பற்றி நான் நினைக்க வில்லை, ஆனால் அந்த தருணம் வந்தால், நான் என்னுடைய இரண்டு கையால் பிடித்து கொள்வேன்,” என ரோகித் ஷர்மா கூறினார்.

ரோகித் சர்மா தற்போது சாம்பியன்ஸ் ட்ராப்பிக்காக ரெடி ஆகி கொண்டிருக்கிறார். சாம்பியன்ஸ் ட்ராப்பியின் முதல் போட்டி ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 4-ஆம் தேதி நமது சொந்த காரரான பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.