தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10-வது தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த தொடர் த்ரில் நிலையை எட்டியுள்ளது என்றும் சொல்லலாம்.
இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி 6 தோல்வி கண்டுள்ள பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில உள்ளது.இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகின்ற போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
இதே தொடரில் மும்பை மற்றும் பஞ்சாப் மோதிய முதல் போட்டியில் 200 ரன் அடித்தும் தோல்வியையே கண்டது கிங்ஸ் XI பஞ்சாப் அணி. பஞ்சாப் அணியில் ஹஷிம் ஆம்லா இல்லாதது பெரும் பின்னடைவாகவே கருத படுகிறது. பந்து வீச்சில் சந்தீப் சர்மா, மோகித் சர்மா, அக்சர் பட்டேல் ஆகியோர் கலக்கி கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் மோதிய கடைசி போட்டியில் த்ரில் வெற்றி பெற்று பஞ்சாப் அணி அசத்தியது. கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் பார்மிற்கு திரும்பி வருவதை கடந்த சில போட்டிகளில் நாம் பார்த்தோம். இன்று நடக்க போகும் போட்டியில் மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம் ஆடினால் மட்டுமே பஞ்சாப் அணி வெற்றி பெற்று பிளே-ஆப்புக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.