இந்தியா அணியை வச்சு செஞ்சதை நினைச்சா எனக்கு இப்போவும் புல்லரிக்கிது..ஹசன் அலி ஒப்ன் டாக்!! 1


2017 சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியை வெற்றி பெற்றது இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது என்று பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் அறிமுகமான சில காலங்களிலேயே அவருடைய திறமையால் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம் அடைந்தார். 2017 சாம்பியன்ஸ் டிராபியில் அதிகமான விக்கெட்களை எடுத்த வீரர்கள் பட்டியல் முதல் வரிசையில் இருந்தார்.

இந்தியா அணியை வச்சு செஞ்சதை நினைச்சா எனக்கு இப்போவும் புல்லரிக்கிது..ஹசன் அலி ஒப்ன் டாக்!! 2

வேகப்பந்து வீச்சாளரான ஹஸன் அலி 2017 சம்பியன்ஸ் டிராபியில் ஐந்து போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்டுகளை எடுத்தார்.இவருடைய எகானம் ரேட் 4.29 இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி அப்போதைய கேப்டனான எம்எஸ் தோனியின் விக்கெட்டை எடுத்தார்.இதனால் இந்திய அணி மிகப் பெரும் நெருக்கடியை சந்தித்தது..

பவுளர்களின் சிறப்பான செயல்பாட்டால் பாகிஸ்தான் அணி வரலாறு காணாத வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு 339 ரன்களை குவித்தது,அதனை சேஸ் செய்த இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 158 ரன்களில் சுருண்டது.இதனால் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது.

இந்தியா அணியை வச்சு செஞ்சதை நினைச்சா எனக்கு இப்போவும் புல்லரிக்கிது..ஹசன் அலி ஒப்ன் டாக்!! 3
Britain Cricket – Pakistan v India – 2017 ICC Champions Trophy Final – The Oval – June 18, 2017 Pakistan’s Mohammad Amir celebrates taking the wicket of India’s Virat Kohli Action Images via Reuters / Andrew Boyers Livepic EDITORIAL USE ONLY. – RTS17JYO

இதுபற்றி பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹசன் அலி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது 2017 சம்பியன்ஸ் டிராபி நினைத்தாலே இப்பொழுதும் புல்லரிக்கிரது.

புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி முதல் மூன்று இடத்தில் இருக்கும் அணிகளை வென்று இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது என்பது சாதாரண விஷயமில்லை.அதைப் பற்றி கூறுவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு அது மகிழ்ச்சிகரமான ஒன்றாக அமைந்தது இந்த வெற்றி இறைவனின் நாட்டத்தால் மட்டுமே நடந்தது என அவர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *