வெஸ்ட் இண்டீஸ் வீரர் பந்துவீச்சில் பிரச்சனை

West Indies players celebrate a wicket against Sri Lanka during the One Day cricket match between the two teams at Harare Sports Club in Harare, Wednesday, Nov, 16, 2016. The two teams are playing in a triangular series featuring Zimbabwe.(AP Photo/Tsvangirayi Mukwazhi)

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரோன்ஸ்போர்ட் பீட்டன் பந்துவீச்சு ஆக்சன் மீது புகார் அளித்துள்ளதை டிசம்பர் 24ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) உறுதி படுத்தியது.

டிசம்பர் 24ஆம் தேதி நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவரது பந்துவீச்சு ஆக்சன் மீது அந்த போட்டியின் நடுவர்கள் புகார் அளித்தார்கள்.

ஐசிசி விதிமுறை படி, அவர் ஐசிசி சோதனை மையத்தில் மீண்டும் சோதனை செய்ய அவருக்கு 14 நாட்கள் இருக்கிறது. அந்த சோதனையை முடிவு தெரியும் வரை, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடலாம். டிசம்பர் 26ஆம் தேதி நியூஸிலாந்து அணியுடன் விளையாடும் போட்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் விளையாடலாம்.

December 20, 2017: New Zealand v West Indies, 1st ODI, Whangarei, December 20, 2017 Bracewell first removed Chris Gayle for 22 before dismissing Shai Hope for a first-ball duck ©Getty Images

“ரோன்ஸ்போர்ட் பீட்டன் பந்துவீச்சு ஆக்சன் மீது புகார் அளித்துள்ளார். அந்த சோதனைக்கான முடிவு 14 நாட்கள் கழித்து தான் வரும். அதுவரை அவர் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடலாம்,” என ஐசிசி தெரிவித்தது.

25 வயதான ரோன்ஸ்போர்ட் பீட்டன் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டும் தான் விளையாடி இருக்கிறார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்னும் நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை. முதல் போட்டியில் விக்கெட் எதுவும் இல்லாமல் சென்ற அவர், இரண்டாவது போட்டியில் 60 ரன் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.