இந்திய அணியின் கேப்டன் கோலியின் சாதனைகள் சொல்லி மாளாதது. 29 வயேதே ஆன அவர் கிரிக்கெட் ஜாமபான்கள் தங்களது வாழநாளில் வைத்த சாதனைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி வருகிறார்.
கடந்த 2009ல் இந்தியாவின் சீனியர் அணியில் அறிமுகமானதில் இருந்து நாளுக்கு நாள் கோலியின் கிரிக்கெட் முதிர்ச்சியும் ஸ்போர்ட்ஸ் மேனாக ஒரு அதிய மதிப்புமிக்க பிராண்டாகவும் மாறிவருகிறார் விராட் கோலி.
இந்திய அணிக்கு ஜாம்பவாங்கள் சச்சின், ட்ராவிட், கங்குலி என அனைவரு ஒரு சேர ஓய்வு பெறும் போது பொக்கிஷமாக அணியில் வந்து சேர்ந்தார் கோலி.
அப்போதிலிருந்து மெதுவாக உலக அளவில் கொடிகட்டிப்பறக்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேனாக வளந்தார். சமீபத்தில் ‘புமா’ (PUMA) ஸ்போர்ட்ஸ் பிராண்டுடன் ஓரு 100 கோடி மதிப்பிளான டீலில் ஒப்பந்தம் செய்தார். மேலும், இந்த பிராண்டுடன் செய்த இந்த ஒப்பந்தத்தால் இவர் புமாவிடம் இருந்து 100 கோடி ரூபாய் பெறுவார்.
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியதையடுத்து ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் கேப்டன் விராட் கோலியும், பவுலிங்கில் பும்ராவும் நம்பர் 1 நிலையில் உள்ளனர்.
இந்திய அணி 5-ம் இடத்தில் உள்ளது. தசமப்புள்ளிகளில் 4-ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தை நெருங்கியுள்ளது இந்திய அணி.
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 103 ரன்களை எடுத்த விராட் கோலி 824 தரவரிசைப் புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ள ஏரோன் பிஞ்ச்சைக் காட்டிலும் 40 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா 724 தரவரிசைப் புள்ளிகளுடன் பந்து வீச்சில் முதலிடம் வகிக்கிறார், இவருக்கு நெருக்கமாக பாகிஸ்தானின் இமாத் வாசிம் 719 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.
Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS
அணிகள் தரவரிசையில் இங்கு வரும்போது முதலிடம் வகித்த நியூஸிலாந்து தன் இடத்தை பாகிஸ்தானிடம் இழந்தது, தற்போது 2-ம் இடத்தில் உள்ளது, இந்திய அணி 5-ம் இடத்தில் உள்ளது, தசமப்புள்ளிகளில் இங்கிலாந்துக்கு நெருக்கமாக உள்ளது.
நியூஸிலாந்து அணியின் இஷ் சோதி டாப் 10-ற்குள் முதல் முறையாக நுழைந்துள்ளார். இந்திய அணியை படுத்தி எடுத்த டிரெண்ட் போல்ட் 14 இடங்கள் முன்னேறி 16-வது இடம் பிடித்துள்ளார்