எப்படி தோத்தோம்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல... இது எங்களோட கேம்... தோல்விக்கு அவர் தான் உண்மையான காரணம் - சஞ்சு சாம்சன் பேட்டி! 1

‘இப்ப வரைக்கும் இந்த தோல்வியிலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை. இன்னும் ஜெயிக்க முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆட்டம் கைநழுவிப் போனதற்கு காரணம் இவர் தான்.’ என்று பேட்டியளித்துள்ளார் சஞ்சு சாம்சன்.

ஜெய்ப்பூரில் நடந்த 26ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் ஓபனிங் ஜோடி கைல் மேயர்ஸ் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் 82 ரன்கள் சேர்த்தனர்.

எப்படி தோத்தோம்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல... இது எங்களோட கேம்... தோல்விக்கு அவர் தான் உண்மையான காரணம் - சஞ்சு சாம்சன் பேட்டி! 2

கைல் மேயர்ஸ் 51 ரன்கள், கேஎல் ராகுல் 39 ரன்கள் அடித்து ஸ்டாய்னிஸ் பந்தில் வெளியேறினர். பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட் இழக்க, மிடில் ஆர்டரில் டாய்னிஸ்(21) மற்றும் நிக்கோலஸ் பூரான்(29) இருவரும் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு உதவினர்.

20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

எப்படி தோத்தோம்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல... இது எங்களோட கேம்... தோல்விக்கு அவர் தான் உண்மையான காரணம் - சஞ்சு சாம்சன் பேட்டி! 3

இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால்(44) மற்றும் பட்லர்(40) இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.

சஞ்சு சாம்சன் தவறான நேரத்தில் ரன் அவுட் ஆகினார். தேவ்தத் படிக்கல்(26), ரியான் பராக்(15) இருவரும் மிடில் ஆர்டரில் நம்பிக்கை கொடுத்தனர். கடைசி 20ஆவது ஓவரை வீசிய ஆவேஷ் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 144/6 ரன்களுக்கு கட்டுப்படுத்த உதவினார். 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வென்றது.

எப்படி தோத்தோம்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல... இது எங்களோட கேம்... தோல்விக்கு அவர் தான் உண்மையான காரணம் - சஞ்சு சாம்சன் பேட்டி! 4

கையில் இருந்த ஆட்டத்தை, நடுவில் சில விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக கோட்டை விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் போட்டி முடிந்தபின் அளித்த பேட்டியில்,

“உண்மையில் ஆட்டம் முடிந்த விதத்தினால், நான் மகிழ்ச்சியாக இல்லை. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்பினேன். இருப்பினும் இதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த போட்டிக்கு நகர வேண்டும்.

எங்களிடம் இருக்கும் பேட்டிங் வரிசைக்கு இந்த ஸ்கோர் எளிதாக சேஸ் செய்யக்கூடியது. ஆனால் அவர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருக்கக்கூடிய இதுபோன்ற பிட்ச்சை நானும் எதிர்பார்த்திருந்தேன். இந்த பிட்ச்சில் சற்று புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும். 9ஆவது ஓவர் வரை நாங்கள் அதை வெளிப்படுத்தினோம்.

எப்படி தோத்தோம்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல... இது எங்களோட கேம்... தோல்விக்கு அவர் தான் உண்மையான காரணம் - சஞ்சு சாம்சன் பேட்டி! 5

ஜெயஸ்வால் நன்றாக ஆரம்பம் கொடுத்து அவுட்டான பிறகு, நடுவில் பெரிய பார்ட்னர்ஷிப் எதுவும் வரவில்லை. சில விக்கெட்டுகளையும் தவறான நேரத்தில் இழந்தோம். அதுதான் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்துவிட்டது.

உண்மையில் லக்னோ அணியினர் மிகச்சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த பிட்ச்சில் கடைசி ஐந்து ஓவர்களில் 50 ரன்கள் அடிப்பது மிகவும் கடினம். ஒவ்வொரு முறையும் அவர்களது பவுலர்களுக்கு எதிராக நாங்கள் அடிக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போதெல்லாம் விக்கெட் இழந்து விட்டோம்.

எங்களுடைய அணியில் இருக்கும் அனுபவத்திற்கும் ஆற்றலுக்கும் இது சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் இல்லை. இதிலிருந்து சரி செய்து கொண்டு அடுத்த போட்டிகளில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

எப்படி தோத்தோம்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல... இது எங்களோட கேம்... தோல்விக்கு அவர் தான் உண்மையான காரணம் - சஞ்சு சாம்சன் பேட்டி! 6

எங்களது பவுலர்களும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்தார்கள். 150-160 ரன்கள் கட்டுப்படுத்தினால் சேஸ் செய்வது  எளிது என திட்டமிட்டோம். அதன்படியே செய்தும் கொடுத்தார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *