இந்த புது ரூல்ஸ் வச்சிக்கிட்டு எதுவுமே பிளான் பண்ண முடில... இன்னைக்கு நான் வெற்றி பெறுவதற்கு காரணமே அவர் தான், அது விராட் கோலி இல்லை - ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ் பேட்டி! 1

இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டார்கள்.  அவர்களால் தான் எளிதாக ஆட்டம் முடிந்தது. வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள் என பேட்டியளித்துள்ளார் ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி அபாரமான துவக்கம் அமைத்துக் கொடுத்தார்.

50 ரன்கள் அடித்த உடனேயே விராட் கோலி அவுட் ஆனார். டு பிளசிஸ் 22 ரன்கள், மஹிபால் 26 ரன்கள் மற்றும் மேக்ஸ்வெல் 24 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

இந்த புது ரூல்ஸ் வச்சிக்கிட்டு எதுவுமே பிளான் பண்ண முடில... இன்னைக்கு நான் வெற்றி பெறுவதற்கு காரணமே அவர் தான், அது விராட் கோலி இல்லை - ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ் பேட்டி! 2

175 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு துவக்கம் மிகவும் மோசமாக இருந்தது. ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிராஜ், பர்னல் மற்றும் விஜயகுமார் வைஷாக் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசி திக்குமுக்காட வைத்தனர். இவர்கள் மூவரும் சேர்ந்து பவர்-பிளே ஓவர்களில் டெல்லி அணியை 32 ரன்கள் மட்டுமே அடிக்கவிட்டு நான்கு விக்கெட்டுகளை தூக்கினர்.

இந்த புது ரூல்ஸ் வச்சிக்கிட்டு எதுவுமே பிளான் பண்ண முடில... இன்னைக்கு நான் வெற்றி பெறுவதற்கு காரணமே அவர் தான், அது விராட் கோலி இல்லை - ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ் பேட்டி! 3

பின்னர் மனிஷ் பாண்டே அரைசதம் அடித்து அவுட் ஆனார். அக்ஸர் பட்டேல் 21 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க, மீண்டும் தடுமாற்றம் கண்டது டெல்லி அணி. கடைசியில் அமன் கான் மற்றும் நார்க்கியா இருவரும் நன்றாக பேட்டிங் செய்ததால் டெல்லி அணியால் 150 ரன்கள் கடக்க முடிந்தது.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்த டெல்லி அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

போட்டி முடிந்த பிறகு வெற்றிக்கான காரணம் குறித்து பேசிய டு பிளசிஸ் கூறுகையில், “மீண்டும் அணியினர் மத்தியில் நம்பிக்கையை கொண்டு வர இந்த வெற்றி எங்களுக்கு அவசியமாக தேவைப்பட்டது. சின்னசாமி மைதானத்தில் இந்த ஸ்கோரை கட்டுப்படுத்துவது என்பது எளிதல்ல  ஆனால் பந்துவீச்சாளர்கள் இன்று செயல்பட்ட விதம் மிகவும் பெருமிதமாக இருக்கிறது.

இந்த புது ரூல்ஸ் வச்சிக்கிட்டு எதுவுமே பிளான் பண்ண முடில... இன்னைக்கு நான் வெற்றி பெறுவதற்கு காரணமே அவர் தான், அது விராட் கோலி இல்லை - ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ் பேட்டி! 4

இப்போது வந்திருக்கும் புதிய விதிமுறைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு 175 ரன்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் பந்துவீச்சாளர்கள் இல்லையென்றால் இது சாத்தியப்பட்டிருக்காது. குறிப்பாக முதல் ஆறு ஓவர்களில் மொத்தமாக ஆட்டத்தை எங்களது பக்கம் கொண்டு வந்துவிட்டார்கள்.

சிராஜ் தொடர்ச்சியாக இதை செய்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் பவர்-பிளே ஓவர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அணியை முன்னிலைப்படுத்துகிறார். இன்றைய போட்டியிலும் அவர் கொடுத்த அழுத்தம் மற்றும் அவருக்கு பக்கபலமாக இருந்த மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகியோர்களால் தான் இந்த வெற்றி சாத்தியமானது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *