டி.20 போட்டிகள் இல்லையென்றால் இனி கிரிக்கெட்டே இல்லை; கங்குலி !! 1

டி.20 போட்டிகள் இல்லையென்றால் இனி கிரிக்கெட்டே இல்லை; கங்குலி

டி.20 போட்டிகளை தவிர்த்துவிட்டால் ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி.20 கிரிக்கெட் அறிமுகமான பின்பு ஒவ்வொரு வீரரின் அதிரடி ஆட்டத்தாலும் டி.20 போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தாலும், டி.20 போட்டிகளில் மட்டுமே ரசிகர்கள் சமீப காலமாக ஆர்வம் செலுத்த துவங்கிவிட்டனர்.

இதனால் டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்து வருகிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் இனி தேவையா என்ற விவாதமும் சமீப காலமாக வலுத்து வருகிறார். இன்னும் சிலர் ஒருநாள் போட்டிகள் கூட தேவையில்லை டி.20 போட்டிகளே போதும் என்றும் கூறி வருகின்றனர்.

டி.20 போட்டிகள் இல்லையென்றால் இனி கிரிக்கெட்டே இல்லை; கங்குலி !! 2

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, டி.20 போட்டிகள் இல்லையெனில் கிரிக்கெட் இனி இல்லை என்று ஓபனாக தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற கண் டாக்டர்கள் மாநாட்டிற்காக தமிழகம் வந்துள்ள சவுரவ் கங்குலி, கோவையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை பேசியுள்ளார்.

டி.20 போட்டிகள் இல்லையென்றால் இனி கிரிக்கெட்டே இல்லை; கங்குலி !! 3

இது குறித்து கங்குலி கூறியதாவது “கிரிக்கெட்டிற்கு டி20 கிரிக்கெட் மிகவும் முக்கியமானது. டி20 கிரிக்கெட் இல்லாமல் கிரிக்கெட் இல்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, நாளைய கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனி மிகச்சிறந்த வீரர்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *