பெண்கள் அணியின் ரன் மெஷின், ஆண்கள் அணியின் ரன் மெஷின் இனிமேல் ஒரே அணியில்.. ஐபிஎல் ஏலத்தில் பல கோடி ரூபாயை வாரி இறைத்து இந்திய வீரங்களையை அள்ளிய ஆர்சிபி! 1

பெண்கள் ஐபிஎல் ஏலத்தில் சுமார் 3.4 கோடி கொடுத்து இந்திய வீராங்கனை ஸ்மிருத்தி மந்தானவை எடுத்துள்ளது ஆர்சிபி பெண்கள் அணி.

பெண்களுக்கான அறிமுக ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுகிறது. ஆகையால் பல்வேறு அணிகள் போட்டி போட்டுக் கொண்டு பெண்களுக்கான அணியை வாங்கின.

பெண்கள் அணியின் ரன் மெஷின், ஆண்கள் அணியின் ரன் மெஷின் இனிமேல் ஒரே அணியில்.. ஐபிஎல் ஏலத்தில் பல கோடி ரூபாயை வாரி இறைத்து இந்திய வீரங்களையை அள்ளிய ஆர்சிபி! 2

முன்னணி வீராங்கனைகளை தங்களது அணிகளில் எடுக்க மும்பையில் ஏலம் நடைபெற்று வருகிறது. அண்டர் 19 பெண்கள் அணியிலிருந்து தற்போது நடைபெற்று வரும் சீனியர் பெண்கள் டி20 உலகக்கோப்பை அணியில் இருக்கும் வீராங்கனைகள் வரை பலரும் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன.

ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி இடதுகை வீராங்கனை ஸ்மிருதி மந்தானா பங்கேற்றபோது, அவரை எடுப்பதற்கு பல அணிகள் முனைப்பு காட்டின. இறுதிவரை ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் போட்டி போட்டன.

இறுதியாக 3.4 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி அணி ஸ்மிருத்தி மந்தானாவை எடுத்தது. மேலும் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 1.7 கோடி ரூபாய்க்கும், நியூசிலாந்து அணியை சேர்ந்த கேப்டன் சோபி டிவைன் 50 லட்சம் ரூபாய்க்கும் ஆர்சிபி பெண்கள் அணியால் எடுக்கப்பட்டனர்.

பெண்கள் அணியின் ரன் மெஷின், ஆண்கள் அணியின் ரன் மெஷின் இனிமேல் ஒரே அணியில்.. ஐபிஎல் ஏலத்தில் பல கோடி ரூபாயை வாரி இறைத்து இந்திய வீரங்களையை அள்ளிய ஆர்சிபி! 3

தற்போது பெண்களுக்கான டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஸ் கார்டனர் எடுக்க, மும்பை மற்றும் உத்திரபிரதேஷ் அணிகளுடன் ஆர்சிபி அணியும் போட்டிபோட்டது. இறுதியாக குஜராத் ஜெயின்ஸ் பெண்கள் அணி 3.2 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

தற்போது வரை ஸ்மிருத்தி மந்தானா அதிக விலைக்கு எடுக்கப்பட்டவராகவும், அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ் கார்டனர் இருக்கின்றனர்.

டி20 பந்துவீச்சில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியின் வீராங்கனை சோபி எக்லெஸ்டன் 1.8 கோடி ரூபாய்க்கு உத்தரபிரதேஷ் வாரியர்ஸ் அணியினால் எடுக்கப்பட்டிருக்கிறார். தற்போது வரை இவைதான் கவனிக்கப்பட்ட ஏலமாக இருக்கிறது.

பெண்கள் அணியின் ரன் மெஷின், ஆண்கள் அணியின் ரன் மெஷின் இனிமேல் ஒரே அணியில்.. ஐபிஎல் ஏலத்தில் பல கோடி ரூபாயை வாரி இறைத்து இந்திய வீரங்களையை அள்ளிய ஆர்சிபி! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *