4. மனிஷ் பாண்டே
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக ஆடிய மனிஷ் பாண்டே கடந்த சீசனில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட களமிறங்கினார். கடந்த சீசன் இவருக்கு மிகவும் மோசமாக அமைந்தது. இந்த சீசனிலும் தொடக்கத்தில் ஐந்தாறு போட்டிகளில் சொதப்பிய மனிஷ் பாண்டே, பிறகு ஒரு சில படங்களில் வெளியில் அமர்த்தப்பட்டு, உள்ளே எடுத்து வரப்பட்டார். அதன் பிறகு அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதலில் அறிமுகமாகிய பாண்டே அவ்வபோது சோதப்பலான ஆட்டத்தால் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளார். பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரை சதம் மற்றும் சதம் என அடுத்தடுத்து அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவரது சமீபத்திய ஆட்டத்தை கருத்தில் கொண்டு தேர்வுக்குழு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடமளிக்க வாய்ப்புள்ளது.