Use your ← → (arrow) keys to browse
5. ஷுப்மன் கில்

அண்டர் 19 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்று அனைவரையும் ஈர்த்த இளம் வீரர் ஷுப்மன் கில், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட சிறப்பாக ஆடினார். அதேபோல் எந்த சீசனிலும் நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலையாக இல்லாமல் வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டதால் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. துவக்க வீரராக களம் இறக்கப்பட்ட பிறகு, அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து அசத்தினார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இரண்டு போட்டிகள் மட்டுமே களமிறக்கப்பட்ட கில், சர்வதேச அளவில் முன் அனுபவம் இல்லாததால் பெரிதும் சோபிக்கவில்லை. இருந்தாலும் தவறுகளை சரிசெய்து துடிப்புடன் ஆடி வருவதால் இவருக்கு இடம் கொடுக்க வாய்ப்புள்ளது.
Use your ← → (arrow) keys to browse