தனது சிறந்த அணியை தேர்வு செய்த ஆஷிஸ் நெஹ்ரா; கேப்டன் யார் தெரியுமா..? 1

தனது சிறந்த அணியை தேர்வு செய்த ஆஷிஸ் நெஹ்ரா; கேப்டன் யார் தெரியுமா..?

உலக கோப்பை முடிந்துவிட்ட நிலையில், உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களில் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து உலக கோப்பையின் சிறந்த அணியை பல வீரர்கள் பலர் தேர்வு செய்துவருகின்றனர்.

உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணியின் நீண்டகால கனவு நனவாகியுள்ளது.

உலக கோப்பை முடிந்துவிட்ட நிலையில், உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களில் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து உலக கோப்பையின் சிறந்த அணியை பல வீரர்கள் பலர் தேர்வு செய்துவருகின்றனர். ஐசிசி உலக கோப்பை சிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்தது. சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர் ஆகிய ஜாம்பவான்களும் தேர்வு செய்திருந்தனர்.

தனது சிறந்த அணியை தேர்வு செய்த ஆஷிஸ் நெஹ்ரா; கேப்டன் யார் தெரியுமா..? 2

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆஷிஷ் நெஹ்ராவும் தேர்வு செய்துள்ளார். இந்த உலக கோப்பையின் சிறந்த தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னரை நெஹ்ரா தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா 648 ரன்களுடன் இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் 647 ரன்களுடன் வார்னர் இரண்டாவது அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்கிறார்கள்.

மூன்றாம் வரிசை வீரராக விராட் கோலியையும் நான்காம் வரிசைக்கு கேன் வில்லியம்சனையும் நெஹ்ரா தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஸ்டோக்ஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். யாருமே விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்யாத நிலையில், நெஹ்ரா தோனியை தேர்வு செய்தது மட்டுமல்லாமல் உலக கோப்பையில் பெரிதாக சோபிக்காத சாஹலை நெஹ்ரா தேர்வு செய்துவைத்திருக்கிறார்.

தனது சிறந்த அணியை தேர்வு செய்த ஆஷிஸ் நெஹ்ரா; கேப்டன் யார் தெரியுமா..? 3

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஆர்ச்சர், ஸ்டார்க் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். சச்சின், கவாஸ்கர் ஆகிய ஜாம்பவான்கள் கோலி, தோனியை எல்லாம் தேர்வு செய்யவில்லை. ஆனால் நெஹ்ரா அவர்கள் இருவரையும் தேர்வு செய்துள்ளார். இந்த உலக கோப்பையில் அவர்களை விட அந்த ரோலில் நன்றாக ஆடிய வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் என்பதாலோ என்னவோ இந்திய அணியின் மரியாதையை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதற்காகக்கூட நெஹ்ரா அவர்களை தேர்வு செய்திருக்கலாம். ஆனால் சாஹலை ஏன் தேர்வு செய்தார் என்பதுதான் பெரிய கேள்வியாகவும் மர்மமாகவும் உள்ளது.

நெஹ்ரா தேர்வு செய்த 2019 உலக கோப்பை சிறந்த அணி:

ரோஹித் சர்மா, வார்னர், விராட் கோலி, வில்லியம்சன், ஷகிப் அல் ஹசன், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், சாஹல், ஆர்ச்சர், ஸ்டார்க், பும்ரா.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *