இந்தியா vs ஆஸ்திரேலியா; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் விராட் கோஹ்லி
உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
கிரிக்கெட் உலகின் வல்லரசை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மே மாத இறுதியில் துவங்கிய இந்த தொடரின் 14வது போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.
லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடியே அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் களமிறங்க உள்ளனர்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணி;
ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, கே.எல் ராகுல், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.
இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;
ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளன் மேஎக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் ஹேரி, நாதன் கவுட்டர் நைல், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.