இந்தியா பாகிஸ்தான்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான் !! 1

இந்தியா பாகிஸ்தான்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி துவங்கிய இந்த தொடரில் இதுவரை பல போட்டிகள் நிறைவடைந்திருந்தாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருந்த இந்திய பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட்  போர் இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்தின் மாஸ்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் இந்திய அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான் !! 2

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் விளையாடாததால் அவருக்கு பதிலாக இளம் வீரரான விஜய் சங்கர் அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் ஷிகர் தவான் இல்லாததால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இன்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

அதே போல் பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களம் காண உள்ளனர்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, விஜய் சங்கர், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ராஹ்.

இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணி;

இமாம் உல் ஹக், ஃப்கர் ஜமான், பாசபர் அசாம், முகமது ஹபீஸ், சர்பராஸ் அஹமது,  சோயிப் மாலிக், இமாத் வசீம், ஷாதப் கான், ஹசன் அலி, வகாப் ரியாஸ், முகமது அமீர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *