"இந்தியாவை வீழ்த்த இதுதான் சரியான நேரம்" வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சூளுரை!! 1

இந்திய அணியை வீழ்த்துவதற்கு சரியான நேரம் கிடைத்திருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த உலக கோப்பை தொடர் மிக மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. அணிக்கு பேட்டிங் சாதகமான ஒன்றாக அமைந்தாலும் பந்து வீச்சு மிக மோசமாக இருந்துள்ளது. அதேநேரம் பீல்டிங்கிலும் படு சொதப்பலாக இருந்ததால் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த போதும் தோல்வியைத் தழுவ நேரிட்டது. துவக்க வீரர் கிறிஸ் கெயில் இதுவரை சிறப்பாக ஆடி வருகிறார். அதே நேரம் நடு வரிசையில் சாய் ஹோப், ஹெட்மாயர், ஜெசன் ஹோல்டர் ஆகியோர் நன்கு ஆடுகின்றனர்.

"இந்தியாவை வீழ்த்த இதுதான் சரியான நேரம்" வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சூளுரை!! 2

துரதிஸ்டவசமாக, ஐபிஎல் தொடரின் மூலம் நல்ல நிலையில் ஆடிவந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் தொடை பகுதி, கையில் உள்ள கனுபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். துவக்க வீரர் எவின் லெவிஸ் காயத்தினால் அவதி படுவதால், அணிக்கு பின்னடைவாக உள்ளது.

வேகப்பந்து வீச்சில் காட்ரேல் மட்டுமே சற்று ஆறுதல் தரும் விதமாக பந்து வீசி வருகிறார். கேமர் ரோச் மற்றும் உசேன் தாமஸ் இருவரும் எதிர் பார்த்த அளவிற்கு செயல்படவில்லை.

"இந்தியாவை வீழ்த்த இதுதான் சரியான நேரம்" வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சூளுரை!! 3

பயிற்சியின்போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில், இந்திய அணி பலமிக்க அணியாக இருக்கிறது. இத்தொடரில் நாங்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமெனில் வரும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். பலம் மிக்க இந்திய அணியை வீழ்த்துவதால் இனிவரும் போட்டிகளில் எங்களுக்கு கூடுதல் உத்வேகம் கிடைக்கும்.

இந்திய அணியை வீழ்த்துவது என்பது எளிதல்ல. ஆதலால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இப்போட்டி எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மைதானத்தில் எங்களது செயல்பாட்டை காட்டுவதற்கு மிகுந்த ஆவலாக உள்ளோம் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *