உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா!!! 1

உலகக்கோப்பை கால்பந்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் குரேஷியா அணி வீழ்த்தி, கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பை பைனலுக்கு முன்னேறியது.

ரஷ்யாவில் 21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகலள் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து- குரேஷியா அணிகள் மோதின. 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பைனலுக்கு செல்லும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா!!! 2

பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இளவரசர் உட்பட பலரும் எதிர்பார்த்த போது இன்று நடைபெற்றது.

இங்கிலாந்து அணிக்கு சிறப்பான துவக்கம் 

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா!!! 3

அதன் படி ஆட்டம் துவங்கிய 5-வது நிமிடத்திலே இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் ப்ரீ கிக் மூலம் அபாரமாக ஒரு கோல் அடிக்க இங்கிலாந்து வீரர்கள் துள்ளி குதித்தனர். அதுமட்டுமின்றி போட்டி துவங்கிய சிறிது நிமிடத்திலே கோல் அடிக்கப்பட்டதால், மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந்தது.

இதையடுத்து முதல் பாதியில் குரேஷியா அணி எந்த கோலும் அடிக்காத காரணத்தினால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என்று முன்னிலை வகித்தது.

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா!!! 4

ஆக்ரோஷமாக ஆடிய குரேஷியா வீரர்கள் 

அதன் பின் இரண்டாவது பாதி துவங்கியவுடனே குரேஷியா வீரர்கள் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் குரேஷியா வீரர்களிடம் பந்து மாறி, மாறி பறந்தது.

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா!!! 5

 

குரேஷியா வீரர்களும் கோல் அடிக்க போராடினார். அதன் பயனாக 68-வது நிமிடத்தில் குரேஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்காத காரணத்தினால் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் முடிந்தன.

இங்கிலாந்தை அதிச்சிக்குள்ளாகிய கூடுதல் நேரம் 

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா!!! 6

சமநிலையில் முடிந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அந்த கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவதாக வழங்கப்பட்ட நேரத்தில் குரேஷியா வீரர் மாரியோ மண்டஸுகிச் அற்புதமாக கோல் அடிக்க இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா!!! 7

அதன் பின் இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக போராடிய போது, கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக குரோசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கனவை உடைத்த மாரியோ மண்டஸுகிச்சை குரேஷியா நாட்டு ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இணையதளத்தில் இவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா!!! 8

இறுதியில் வெறும் கையேடு வெளியேறியது இங்கிலாந்து அணி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *