உலகக்கோப்பையில் நிச்சயம் இடம்பிடிப்பேன்; ரிஷப் பண்ட் நம்பிக்கை !! 1

உலகக்கோப்பையில் நிச்சயம் இடம்பிடிப்பேன்; ரிஷப் பண்ட் நம்பிக்கை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. தற்போது கேப்டன் பதவியில் இல்லாத எம்எஸ் டோனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழும் எம்எஸ் டோனி, விக்கெட் கீப்பர் பணியில் துல்லியமாக செயல்பட கூடியவர். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டம்பிங் செய்யும் வல்லமை படைத்தனர்.

உலகக்கோப்பையில் நிச்சயம் இடம்பிடிப்பேன்; ரிஷப் பண்ட் நம்பிக்கை !! 2

அவருக்கு தற்போது 37 வயதாகிறது. டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் டோனி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் டோனி விளையாடினார். கடைசி இரண்டு போடடிகளிலும் ரிஷப் பந்த் இடம்பிடித்தார். அப்போது கீப்பிங் பணியில் ரிஷப் பந்த் திணறினார்.

இதனால் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோசம் எழுப்பினர். இதற்கிடையே எம்எஸ் டோனியுடன் ரிஷப் பந்த்-ஐ ஒப்பிடக்கூடாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரிஷப் பந்தும் அதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘நான் டோனியுடன் அதிக அளவு ஒப்பிட்டு பேசுவதைப் பற்றி நினைப்பதில்லை. ஒரு வீரராக அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எம்எஸ் டோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான்.

உலகக்கோப்பையில் நிச்சயம் இடம்பிடிப்பேன்; ரிஷப் பண்ட் நம்பிக்கை !! 3

டோனியுடன் ரசிகர்கள் என்னை ஒப்பிடுவதை நான் விரும்புவதில்லை. ஆனால், அப்படி ஒப்பிடுவதை என்னால் நிறத்த முடியாது. போட்டியின்போதும், போட்டிக்கு வெளியேயும் என்னால் எப்படி முன்னேற முடியும் என்பது குறித்து அவரிடம் பேசி பயனை பெற்றுக் கொள்வேன். ஒழுக்கம் உள்பட பல்வேறு விஷயங்களை டோனி மற்றும் விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுள்ளேன், அதே போல் எப்படியாவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் எனது மனதிற்குள் ஓடி கொண்டே இருக்கிறது, அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும், பயிற்சிகளையும் எடுத்து வருகிறேன்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *