உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பெரிய போட்டி நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி போட்டிகளை தற்பொழுது மேற்கொண்டிருக்கின்றனர். இந்திய அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேன் புஜாரா தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து முடிந்த பின்னர் உலக அளவில் டெஸ்ட் போட்டிக்கான மவுசு இன்னும் அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறார்.
2007 உலகக் கோப்பை டி20 தொடர் போலவே இதே பார்க்கிறேன்
2007ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடர் நடந்து முடிந்தவுடன் இன்று வரை டி 20 போட்டிகளுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதுபோலவே டெஸ்ட் போட்டிகள் தற்போது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பெரிய போட்டியே நடந்து முடிந்தவுடன் உலக அளவில் இன்னும் அதிகமாக பேசப்படும்.

மேலும் நிச்சயமாக இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஒவ்வொரு இளம் வீரர்களும் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் அனைவரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். இறுதியில் டெஸ்ட் போட்டியில் அழியக் கூடாது என்றும், 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் போலவே டெஸ்ட் போட்டிகளும் கடைசிவரை கிரிக்கெட் வரலாற்றில் இருக்க வேண்டும் என்றும் புஜாரா கூறியிருக்கிறார்.
இரண்டு வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு இது
இரண்டு வருடமாக இந்திய அணி மிக சிறப்பாக டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 818 ரன்கள் குவித்த புஜாரா இது இரண்டு வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று கூறியிருக்கிறார். நிச்சயமாக இதை நாங்கள் எளிதில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. இறுதிப் போட்டியை வெல்லும் முனைப்போடு நாங்கள் அனைவரும் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.
ஐந்து நாட்கள் விளையாடும் அளவுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருவதாகவும், தங்களுடைய முழு திறமையை காண்பிக்கும் வண்ணம் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு விளையாட போவதாகவும் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற புஜாரா ஒரு முக்கிய வீரராக செயல்பட்டார். அதைப்போலவே இறுதிப் போட்டியிலும் அவர் செயல்பட வேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் தற்பொழுது எதிர்பார்க்கின்றனர். நாளை மறுநாள் இந்திய நேரப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3:30 மணிக்கு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.