எப்பதாண்டா திருந்துவீங்க..? கே.எல் ராகுலுக்கு மீண்டும் இடம் கொடுத்த பிசிசிஐ; பொறுமை இழந்த ரசிகர்கள் !! 1
எப்பதாண்டா திருந்துவீங்க..? கே.எல் ராகுலுக்கு மீண்டும் இடம் கொடுத்த பிசிசிஐ; பொறுமை இழந்த ரசிகர்கள்

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுலுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது.

எப்பதாண்டா திருந்துவீங்க..? கே.எல் ராகுலுக்கு மீண்டும் இடம் கொடுத்த பிசிசிஐ; பொறுமை இழந்த ரசிகர்கள் !! 2

டெஸ்ட் தொடரின் கடந்த இரண்டு போட்டியிலும் கடுமையாக சொதப்பிய கே.எல் ராகுலுக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியோ அவருக்கு எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கான அணியில் மீண்டும் இடம் கொடுத்துள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கே.எல் ராகுலுக்கு மீண்டும் இடம் கொடுத்தது தவறான முடிவு என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பினாலும் அவருக்கு மட்டும் அதிகமான வாய்ப்புகள் கொடுப்பது ஏன் எனவும் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ் பாரத், இஷான் கிஷன், ரவிச்சந்திர அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனாத்கட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *