டி20 போட்டிகள் போன்று டெஸ்ட் போட்டிகளில் வித்தியாசமான ஷார்ட்டுகளை முயற்சிக்கக் கூடாது அது நமக்கே ஆபத்தாக முடியும் என்று சொல்லிவிட்டேன் யாரும் கேட்கவில்லை என்று பேசியுள்ளார் மைக்கேல் ஹஸ்ஸி.
இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இரண்டிலும் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வீரர்கள் வெறும் 91 ரன்கள் ஆல் அவுட் ஆகினர். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த ஆஸ்திரேலியா அணி, 95 ரன்களில் 7 விக்கெட்டுகள் இழந்தனர். 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது பேட்டிங்கில் அணுகிய விதம் மற்றும் ஷாட்கள் தேர்வு செய்த விதம் முற்றிலும் தவறானதாக இருந்தது. இதுதான் அவர்களது படுதோல்விக்கு காரணம் என்று பேசியுள்ளார் மைக்கேல் ஹஸ்ஸி.
“லிமிடெட் ஓவர் போட்டிகளில் வீரர்கள் வித்தியாசமான ஷாட்களை பேட்ஸ்மேன்கள் விளையாடி வந்தனர். தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் அதை செய்யத் துவங்கிவிட்டனர். 10- 15 வருடங்களுக்கு முன்பு வரை இதுபோன்று டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் விளையாடவில்லை. இது குறித்து விமர்சனங்கள் செய்யவேண்டும்.
வித்தியாசமான ஷாட்டுகள் உங்களது பலமாக இருக்கலாம். ஆனால் அதை எந்த சூழல், எந்த நேரம் மற்றும் எந்த பவுலருக்கு எதிராக விளையாடுகிறோம் என்று கணித்து சரியாக பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்தியாவிற்கு எதிராக அதை பயன்படுத்த முயற்சித்தனர். ஆனால் சரியாக பயன்படுத்தவில்லை. இதன் காரணமாகத் தான் மளமளவென விக்கெட்டுகளை இழந்து படுதோல்விக்கு தள்ளப்பட்டனர்.” என்று பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 1ஆம் தேதி துவங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் ஒன்பதாம் தேதி துவங்குகிறது. அதன்பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.