அடுத்த வருடம் இந்திய பிரீமியர் லீக் தொடருக்கு திறந்த ஏலம் இருப்பதால், அனைத்து வீரர்களின் பெயர்களும் ஏலத்தில் செல்லும். இதனால், பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளது. தங்களது பிடித்த வீரர்கள் இந்த அணிக்கு விளையாடுவாரா, அந்த அணிக்கு விளையாடுவாரா, எந்த அணிக்கு விளையாடுவர் என்று. அதே கேள்வி தான் மும்பை அணியின் ரசிகர்களுக்கும். இதுவரை மும்பை அணிக்கு மூன்று முறை கோப்பையை வென்று தந்திருக்கும் ரோகித் சர்மா, அடுத்த ஆண்டு வேறு அணி வாங்கிவிட்டு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவே விளையாடுவாரா?
அதே நிலைமை தான் விராட் கோலிக்கும். இதுவரை 10 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய விராட் கோலி, அடுத்த ஐபில்-இல் வேறு அணிக்கு விளையாடி பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடினால் பெங்களூரு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்!
இது கஷ்டம் தான், ஆனால் அடுத்த எந்த அணிக்கு விளையாடவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஆமாம், அடுத்த வரும் ஐபில் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் விளையாடவேண்டும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
“நான் மும்பை அணிக்காக விளையாடுகிறேன். நான் வாழ்ந்தது, கிரிக்கெட்டுக்காக செலவழித்த நேரங்கள் எல்லாமே மும்பையில் தான். தற்போது இருக்கும் அதே அணியை பெற்றால் எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கும்,” என ரோகித் சர்மா கூறினார்.
இதுவரை ஐபில்-இல் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை கோப்பைகளை வென்றுள்ளது. மூன்று முறையுமே ரோகித் ஷர்மாவின் தலைமையில் தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திறந்த ஏலத்தை பற்றி பிசிசிஐ இன்னும் ஏதும் பேசவில்லை. ஆனால், அடுத்த ஐபில்-இல் திறந்த ஏலம் நடக்கும், மகேந்திர சிங்க் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் அடுத்த ஐபில்-இல் வேறு அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது.
ஆனார் சிலர், குறிப்பிட்ட அளவான வீரர்களை வைத்து கொள்ளலாம் என சொல்கிறார்கள்.
அதாவது, விராட் கோலியை 10 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கினால், அதே பணத்தை கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியை வாங்கலாம்.
ஆனால் இதில் எந்த விருப்பத்தை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளும் என்று தெரியவில்லை. இதனால், அனைத்து அணிகளும் பிசிசிஐ முடிவு சொல்லும்வரை காத்திருக்க வேண்டும்.