இந்திய அணியை வச்சு செய்வோம்; எச்சரிக்கும் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய நபர் !! 1

இந்திய அணியை வச்சு செய்வோம்; எச்சரிக்கும் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய நபர்

தற்போதை நிலையில் டெஸ்ட் அரங்கில் நம்பர்-1 அணியாக உள்ள இந்திய அணியை சொந்தமண்ணில் வைத்து வீழ்த்துவது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் கனவு ஆஷஸ் கோப்பை அல்லது உலகக்கோப்பை வெல்வதாகவே இருக்கும் என்று தெரிவித்த ஸ்மித். ஆனால் தனக்கு நம்பர்-1 டெஸ்ட் அணியாக உள்ள இந்திய அணியை அதன் சொந்தமண்ணில் வைத்து வீழ்த்துவதே கனவு என தெரிவித்துள்ளார். தவிர, கடந்த 2004க்கு பின் இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. மேலும் அந்த தொடர் வெற்றிக்கு பின் ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் ஒரே ஒரு டெஸ்டில் (2017, புனே டெஸ்ட்) மட்டுமே வென்றுள்ளது.

இந்திய அணியை வச்சு செய்வோம்; எச்சரிக்கும் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய நபர் !! 2

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் பாட்காஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இஷ் சோதியுடன் பேசிய ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், “நான் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற விரும்புகிறேன். ஆஸ்திரேலிய வீரராக மிகப்பெரிய ஆஷஸ் தொடர், உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பது கனவு. ஆனால் தற்போது நம்பர்-1 அணியான இந்திய அணியை அதன் சொந்தமண்ணில் வீழ்த்துவது கடினம்.

இந்திய அணியை வச்சு செய்வோம்; எச்சரிக்கும் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய நபர் !! 3

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இந்தியா மிகவும் கடினமான இடம். அதனால் அங்கு ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்ற விரும்புகிறேன். மற்றபடி எனக்கு வேறு எந்த இலக்கும் இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தொடருக்கும், என்னை மேம்படுத்த தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வேன். உலகக்கோப்பை ஆஷஸ் தொடர் என கடந்தாண்டு மிக நீண்டதாக இருந்தது. அதனால் இந்த ஓய்வு என்பது மோசமானதல்ல. ஆனால் இன்னும் சில வாரங்களில் இது சரியாகிவிடும் என நினைக்கிறேன். மீண்டும் விளையாட அதிக ஆர்வமாக உள்ளேன் ” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *