நான் அதற்கு தகுதியானவன் அல்ல; கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்ற பென் ஸ்டோக்ஸ் !! 1

நான் அதற்கு தகுதியானவன் அல்ல; கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்ற பென் ஸ்டோக்ஸ்

நியூஸிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு தகுதியானவர் கேன் வில்லியம்ஸன்தான், என்னுடைய ஓட்டும் அவருக்குத்தான் எனக் கூறி நியூஸிலாந்து அளிக்க இருக்கும் விருதை பணிவுடன் பென் ஸ்டோக்ஸ் மறுத்துவிட்டார்.

ஐசிசியின் 12-வது உலகக் கோப்பை சாம்பியனாக இங்கிலாந்து மூடிசூடியது. இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து நிர்ணயித்த 241 ரன்களைத் துரத்திய இங்கிலாந்து 241 ரன்கள் சேர்த்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் ஒரே அளவான 15 ரன்களை எட்டியதால் போட்டி சமனில் முடிந்தது.

ஆனால், ஆட்டத்தில் அதிகமான பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

இதில் பென் ஸ்டோக்ஸ்தான் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஸ்டோக்ஸ் 84 ரன்களும், சூப்பர் ஓவரில் 8 ரன்களும் சேர்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

நான் அதற்கு தகுதியானவன் அல்ல; கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்ற பென் ஸ்டோக்ஸ் !! 2

இங்கிலாந்து கோப்பையை வென்றபின் அந்த அணி வீரர் பென் ஸ்டோக்ஸின் விளையாட்டு அனைவராலும் பாராட்டப்பட்டது. நியூஸிலாந்தில் பிறந்தவரான பென் ஸ்டோக்ஸ் அதற்குபின் இங்கிலாந்து சென்று அந்த நாட்டுக்காக விளையாடினார்.

இதனால், நியூஸிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கும் பென் ஸ்டோக்ஸ்  பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில், நியூஸிலாந்து சார்பில் தனக்கு அளிக்கப்பட இருக்கும் விருதை பென் ஸ்டோக்ஸ் மிகவும் பணிவுடன் மறுத்துள்ளார். இந்த விருதுக்கு தகுதியானவர் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *