இந்திய கிரிக்கெட் அணி கடந்த 89 வருட காலமாக டெஸ்ட் போட்டிகளை நடுநிலை மைதானங்களில் விளையாடியது கிடையாது. ஒன்று தனது சொந்த மைதானத்தில் அல்லது எதிர் அணி விளையாட்டு மைதானத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது. இந்திய அணியை போலவே வங்கதேச அணி யும் எந்தவித நடுநிலை மைதானங்களிலும் விளையாடியது கிடையாது.

ஆனால் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் நடுநிலை மைதானங்களில் விளையாடி இருக்கின்றனர். இதனால் இந்திய அணி முதல் முறையாக நடுநிலை மைதானத்தில் இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாட உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இவை தவிர மற்றவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அணியுடன் நடுநிலை மைதானங்களில் விளையாடி இருக்கின்றனர். அதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது 2009ஆம் ஆண்டு நடந்த ஒரு எதிர்பாராத விதமான சம்பவம். 2009ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது தீவிரவாதிகள் அவர்களை தாக்கினர். அதனால் மற்ற அணிகள் அந்த ஆண்டிலிருந்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சம்மதிக்கவில்லை.

எனவே பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து மற்ற அணிகளுடன் விளையாடி வந்தது. இருப்பினும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பாகிஸ்தானுடன் நடுநிலை மைதானங்களில் விளையாடியது கிடையாது. ஆனால் முதல் முறையாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது.
89 வருடம் கழித்து நடக்க இருக்கும் ஒரு புதிய திருப்பம்
எனவே வருகிற ஜூன் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூன் 23ஆம் தேதி வரை நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியே நடுநிலை மைதானத்தில் வைத்து இந்தியா முதல் முறையாக விளையாட இருக்கும் போட்டியாக அமையும். இந்த போட்டியில் 4000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட போகின்றனர்.

ஐசிசி கிரிக்கெட் நிர்வாகம் இதில் 2,000 டிக்கெட்டுகளை ஸ்பான்சர் அணிகளுக்கும் மேற்கொண்டு விளம்பரதாரர் நபர்களுக்கும் அளிக்க உள்ளது. எனவே மீதமுள்ள இரண்டாயிரம் டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு வினியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.