இவர் இல்லாமல் இறுதிப்போட்டியில் களமிறங்க வேண்டாம்! இந்திய அணிக்கு வார்னர் எச்சரிக்கை! 1

வருகிற வெள்ளிக்கிழமை ஜூன் 18-ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா நிச்சயமாக இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய அதிரடி ஓபனிங் வீரர் டேவிட் வார்னர் வலியுறுத்தியுள்ளார்.

நிச்சயமாக ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் விளையாட வேண்டும்

இங்கிலாந்து மைதானங்களில் நிச்சயமாக ஒவ்வொரு அணியும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் இரண்டு ஸ்பின் பந்துவீச்சாளர்கள் அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் ஒரு ஸ்பின் பந்து வீச்சாளர் என்கிற பார்முலாவில் தான் விளையாடுவார்கள்.

இவர் இல்லாமல் இறுதிப்போட்டியில் களமிறங்க வேண்டாம்! இந்திய அணிக்கு வார்னர் எச்சரிக்கை! 2

அதன்படி நிச்சயமாக இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் 2 ஸ்பின் பந்து வீச்சாளர்களை விளையாட வைக்க வேண்டும் என்று டேவிட் வார்னர் வலியுறுத்தியுள்ளார். அந்த இரண்டு வீரர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேலும் ஒரு வீரராக ரவீந்திர ஜடேஜா நிச்சயமாக விளையாட வேண்டும் என்று டேவிட் வார்னர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து மைதானங்களில் ரவீந்திர ஜடேஜா மிக அற்புதமாக செயல்படுவார்

இது பற்றி விளக்கமாகப் பேசுயுள்ள டேவிட் வார்னர் இங்கிலாந்து மைதானங்களில் ரவீந்திர ஜடேஜா மிக சிறப்பாக செயல்படும் ஒரு வீரர். இதற்கு முன் அங்கு விளையாடி அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார். அடிப்படையில் அவர் ஒரு ஆல்ரவுண்டர் வீரர்.

எனவே அவரை இறுதிப்போட்டியில் விளையாட வைப்பதன் மூலம் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் பலப்படும். அதே சமயத்தில் அவர் ஒரு மிகச்சிறந்த ஃபீல்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே நிச்சயமாக அவர் இறுதிப் போட்டியில் விளையாடினார் இந்திய அணிக்கு சற்று அட்வான்டேஜ் ஆக இருக்கும் என்று டேவிட் வார்னர் விளக்கியுள்ளார்.

இவர் இல்லாமல் இறுதிப்போட்டியில் களமிறங்க வேண்டாம்! இந்திய அணிக்கு வார்னர் எச்சரிக்கை! 3

பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வரும் இந்திய அணி

இந்திய அணி தற்போது இரண்டு அணிகளாகப் தங்களது அணி வீரர்களை பிரித்து விராட் கோலி தலைமையில் பேட்ஸ்மேன்கள் ஒரு அணியாகவும் கேஎல் ராகுல் தலைமையில் பந்து வீச்சாளர்கள் ஒரு அணியாகவும் மோதி பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதேசமயம் ஓபனிங் வீரர் சுப்மன் கில் 85 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *