உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 49 ரன்களும், விராட் கோலியை 44 ரன்களும் ரோஹித் ஷர்மா 34 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணிகள் மிக சிறப்பாக பந்து வீசிய ஜேமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் நியூஸிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்சில் நேற்றைய நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லேதம் 30 ரன்களும் கான்வாய் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தற்பொழுது கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஜோடி விளையாடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய கைல் ஜேமிசன்
மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி 44 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இது குறித்து பேசியுள்ள கைல் ஜேமிசன், விராட் கோலி போன்ற ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேனது விக்கெட்டை கைப்பற்றுவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அவருடைய விக்கெட்டை கைப்பற்றியவுடன் எனக்கு நானே பெருமை பாராட்டி கொண்டேன் என்று கைல் ஜேமிசன் கூறியுள்ளார்.

நிச்சயமாக அவர் நீண்ட நேரம் விளையாடினால் அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும். அவருடைய விக்கெட் முக்கியமான ஒரு விக்கெட்டாக எங்களது அணியில் பார்க்கப்பட்டது. நாங்கள் அனைவரும் அவருடைய விக்கெட்டை கைப்பற்ற திட்டம் தீட்டி இருந்தோம். அதில் அவர் என்னுடைய பந்தில் ஆட்டம் இழந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
மேலும் முதல் இன்னிங்சில் கைல் ஜேமிசன் மொத்தமாக 5 விக்கெட்டுகளை ( ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா ) கைப்பற்றி அசத்தினார். இதன் மூலமாக முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூஸிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை நேற்று அவர் புரிந்துள்ளார்.