இஷான் கிஷனா..? ஜெய்ஸ்வாலா..? அடுத்த போட்டியில் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும்..? முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1
இஷான் கிஷனா..? ஜெய்ஸ்வாலா..? அடுத்த போட்டியில் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும்..? முன்னாள் வீரர் ஓபன் டாக்

விண்டீஸ் அணியுடனான நான்காவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இஷான் கிஷன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரில் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரானா ஆர்.பி சிங் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இஷான் கிஷனா..? ஜெய்ஸ்வாலா..? அடுத்த போட்டியில் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும்..? முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் விண்டீஸ் அணி 2 போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி 12ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இந்தியா விண்டீஸ் இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆர்.பி சிங், நான்காவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இஷான் கிஷன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரில் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இஷான் கிஷனா..? ஜெய்ஸ்வாலா..? அடுத்த போட்டியில் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும்..? முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

இது குறித்து ஆர்.பி சிங் பேசுகையில், “கடந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு ஏமாற்றம் கொடுத்தாலும், வெறும் ஒரு போட்டியை மட்டும் அடிப்படையாக வைத்து யாரையும் தீர்மானித்துவிட கூடாது என்பதே எனது கருத்து. குறைந்தது நான்கு அல்லது ஐந்து போட்டிகளாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு போட்டியை வைத்து எதையும் தீர்மானித்துவிட கூடாது. அவர் ஐபிஎல் தொடரில் இருந்து மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார், எனவே அவருக்கு கூடுதலான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *