புஜாராவிற்கு பதில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம்... இன்னும் என்னென்ன மாற்றங்கள்? - பிசிசிஐ அதிரடி முடிவு! 1

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பாக புஜாரா நீக்கப்படுகிறார். ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வந்திருக்கும் என்னென்ன மாற்றங்கள் என்பதை பின்வருமாறு காண்போம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்திய அணிக்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. ஆஸ்திரேலியா அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. அடுத்தடுத்து இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை வந்து கோப்பையை வெல்லாமல் இந்திய அணி ஏமாற்றத்துடன் வெளியேறுவது சற்று விமர்சனத்தை பெற்று தந்திருக்கிறது.

புஜாராவிற்கு பதில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம்... இன்னும் என்னென்ன மாற்றங்கள்? - பிசிசிஐ அதிரடி முடிவு! 2

இதனால் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்திலும் சில மாற்றங்களை கொண்டு வரலாம். அத்துடன் 50-ஓவர் உலகக்கோப்பை டி20 உலகக்கோப்பை என தொடர்ந்து வரவிருப்பதால் அதில் எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது என்று பிசிசிஐ கவனமாக இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிந்தபின், வருகிற ஜூலை 12ஆம் துவங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியிலேயே மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்கிற நோக்கில் பிசிசிஐ தேர்வுக்குழு செயல்பட்டு வருகிறது.

புஜாராவிற்கு பதில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம்... இன்னும் என்னென்ன மாற்றங்கள்? - பிசிசிஐ அதிரடி முடிவு! 3

பிசிசிஐ தரப்பிலிருந்து வரும் தகவல்களின்படி, புஜாராவிற்கு டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட உள்ளதாகவும் இனி 3ஆவது இடத்திற்கு ஜெய்ஸ்வால் பயன்படுத்தப்படலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது. மேலும் கடந்த டி20 உலககோப்பைக்கு முன்பிருந்தே இந்திய அணியில் இடம் கொடுக்கப்படாமல் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இடம் கொடுக்க உள்ளார்கள்.

ஐபிஎல் போட்டிகளில் பினிஷிங் ரோலில் சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங் டி20 போட்டிகளில் விளையாட வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து ஓய்வில்லாமல் விளையாடி வரும் ஷமி மற்றும் சிராஜ் இருவருக்கும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்க உள்ளனர்.

புஜாராவிற்கு பதில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம்... இன்னும் என்னென்ன மாற்றங்கள்? - பிசிசிஐ அதிரடி முடிவு! 4

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மூன்றுவித போட்டிகளுக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வருகிற சனிக்கிழமை மாலை வெளியிடப்பட உள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் வந்திருக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *