டி.20 உலகக்கோப்பையில் இந்த பையன் பெரிய சம்பவம் செய்ய போறது உறுதி; யசஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டி பேசிய அபிசேக் நாயர் !! 1
டி.20 உலகக்கோப்பையில் இந்த பையன் பெரிய சம்பவம் செய்ய போறது உறுதி; யசஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டி பேசிய அபிசேக் நாயர்

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி.20 தொடரில் யசஸ்வி ஜெய்ஸ்வாலே இந்திய அணியின் துவக்க வீரராக இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரரான அபிசேக் நாயர் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதால் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். பும்ராஹ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் பலருக்கும் இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இஷான் கிஷன், கெய்க்வாட், ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

டி.20 உலகக்கோப்பையில் இந்த பையன் பெரிய சம்பவம் செய்ய போறது உறுதி; யசஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டி பேசிய அபிசேக் நாயர் !! 2

இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி, இரண்டு போட்டியில்  மிரட்டல் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் மிரட்டல் வெற்றிக்கு, இஷான் கிஷன், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் பயம் இல்லாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பயம் இல்லாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களை முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

டி.20 உலகக்கோப்பையில் இந்த பையன் பெரிய சம்பவம் செய்ய போறது உறுதி; யசஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டி பேசிய அபிசேக் நாயர் !! 3

அந்தவகையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான அபிசேக் நாயர், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடரில் யசஸ்வி ஜெய்ஸ்வாலே இந்திய அணியின் துவக்க வீரராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அபிசேக் நாயர் பேசுகையில், “இந்திய அணியின் கடந்த சில தொடர்களில் யசஸ்வி ஜெய்ஸ்வாலிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவரும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை தொடர்ந்து மிக சிறப்பாக செய்து வருகிறார். டி.20 போட்டிகளில் மட்டும் இல்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் கூட யசஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். யசஸ்வி ஜெய்ஸ்வாலிற்கு நிச்சயமாக இந்திய அணியில் பெரிய எதிர்காலம் உள்ளது. ஜெய்ஸ்வால் இந்திய அணியில் தனக்கான  இடத்தை விரைவில் உறுதி செய்து கொள்வார். என்னை பொறுத்தவரையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரிலும் ஜெய்ஸ்வாலே இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்குவார். துவக்க வீரராக களமிறங்க அவரே சரியானவர் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *