இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் ஏப்ரல் 9 முதல் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 லீக் போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஒரு வெற்றியும் ஆர்சிபி அணி இரண்டு வெற்றிகளையும் பெற்று இருக்கிறது.
தற்போது புள்ளி பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் ஆர்சிபி அணி தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய 4வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்களில் வெற்றியை கண்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பாராக் 11 பந்தில் 25 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார்.

இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரிகளை அடித்து இருக்கிறார். 19வயதான இவர் இதுபோன்று அதிரடியாக விளையாடி வருவதால் அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கிரிக் பஸ்ஸிற்கு பேட்டியளித்த ரியான் பாராக் விராட் கோலி கடந்தாண்டு ஐபிஎல்லில் தன்னிடம் கூறியதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். பாராக் கூறுகையில் “கடந்த ஐபிஎல்லில் விராட் கோலி எனக்கு மெசேஜ் செய்தார். அதில் கோலி நீ ஆர்ஞச் கேப் வாங்கப் போவதில்லை.

நீ 5வது மற்றும் 6வது பேட்ஸ்மனாக களமிறங்குவதால் இதற்கு சாத்தியமில்லை. நீ கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அணிக்கு தேவையான ரன்கள் 20-30 ரன்கள் குவித்து தர முயற்சி செய்ய வேண்டும். அதுவும் இக்கட்டான சமயத்தில் இதை செய்ய வேண்டும். விராட் கோலி சொன்ன இந்த விஷயத்தை நான் மனதில் வைத்து விளையாடி வருகிறேன்” என்றார்.
மேலும் பேசிய ரியான் பாராக் “ஐபிஎல்லில் சர்வதேச வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், அஜின்கியா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லருடன் டிரெஸிங் ரூமை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. விராட் கோலி மற்றும் எம் எஸ் தோனி போன்றவர்களை சந்தித்துக்கு போது இது என்னை மனதளவில் வலிமையாக்குகிறது” என்று கிரிக் பஸ்ஸிற்கு பேட்டி அளித்துள்ளார்.
