இனி அவர நம்பி எந்த பிரயோஜனும் இல்ல... இனியாச்சும் அவர கழட்டிவிடுங்க; பெங்களூர் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

2023 ஐபிஎல் தொடரில் முகமது சிராஜை விடுவித்தால் நிச்சயம் பெங்களூரு அணிக்கு பல கோடி மிச்சமாகும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி முதல் எலிமினேட்டர் போட்டியை வெற்றிகரமாக கடந்து கோப்பையை வென்று விடலாம் என்ற கனவோடு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பரிதாப தோல்வியை தழுவி இந்த வருடமும் கோப்பையை வெல்லாமல் வெறும் கையோடு திரும்பியது.இனி அவர நம்பி எந்த பிரயோஜனும் இல்ல... இனியாச்சும் அவர கழட்டிவிடுங்க; பெங்களூர் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

பெங்களூரு அணியின் இந்த தோல்விக்கு சீனியர் வீரர்களின் சொதப்பலான ஆட்டம் என்றே கூறலாம், அந்த அளவிற்கு சீனியர் வீரர்கள் நிலைமையை உணர்ந்து விளையாடவில்லை.

குறிப்பாக இந்த வருட ஐபிஎல் தொடரில் ஏழு கோடி கொடுத்து அணியில் தக்க வைக்கப்பட்ட முகமது சிராஜிர்க்கு மிக மோசமாக அமைந்துவிட்டது, இந்த தொடரில் 15 போட்டிகளில் பங்கேற்ற சிராஜ் வெறும் 10 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் இவருடைய பந்துவீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் நாலு திசைகளிலும் அடித்து சிதற விட்டார்கள், இருந்தபோதும் பெங்களூரு அணி இவர் மீது நம்பிக்கை வைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தது ஆனால் இவர் அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.இனி அவர நம்பி எந்த பிரயோஜனும் இல்ல... இனியாச்சும் அவர கழட்டிவிடுங்க; பெங்களூர் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

 

இதனால் பெங்களூர் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டார், இதனால் பெங்களூர் அணி இவரை விடுவித்து விட வேண்டும் என்று பலரும் பெங்களூர் அணிக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா பெங்களூர் அணி 2023 ஐபிஎல் தொடரில் விடுவித்துவிட்டு மீண்டும் அணியில் இணைத்தால் சில கோடிகள் மிச்சமாகும் என்று தெரிவித்துள்ளார்.இனி அவர நம்பி எந்த பிரயோஜனும் இல்ல... இனியாச்சும் அவர கழட்டிவிடுங்க; பெங்களூர் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 4

 

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “7 கோடி ரூபாய் கொடுத்து தங்க வைக்கப்பட்ட முகமது சிராஜ் 2023 ஐபிஎல் தொடரில் விடுவித்தால் மீண்டும் உங்களால் ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும் மேலும் அல்லது நீங்கள் இன்னும் குறைவான தொகையில் சிராஜை அணியில் இணைத்துக் கொள்ளலாம். தற்போது பெங்களூர் அணியில் நல்ல பார்மில் இருக்கும் வெளிநாட்டு வீரர் ஜோஸ் ஹசல்வுட் உள்ளார், மேலும் ஹர்ஷல் பட்டேலும் சிறப்பாக செயல்படுகிறார்,ஆகாஷ் தீப் பரவாயில்லை, அப்படி இருந்தும் நீங்கள் சிராஜை அணியில் வைத்துக் கொள்ளலாம் என்றால் சிறந்த முடிவு தான்,ஆனால் அவருக்கு இந்த தொடர் சரிப்பட்டு வரவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் ” என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment

Your email address will not be published.