பேசாம டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ல கேஎல் ராகுலை கீப்பிங் பண்ணவிடுங்க.. என்ன நான் சொல்றது? - சுனில் கவாஸ்கர் பேச்சு! 1

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கேஎல் ராகுல் கீப்பராக களமிறக்கலாம். 5வது 6வது இடத்தில் களமிறங்கி நன்றாக பேட்டிங் செய்வார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

இந்தியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராஃபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதியும் பெற்றுள்ளது.

வருகிற ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு எத்தகைய பிளேயிங் லெவனை இந்திய அணி தேர்வு செய்யவேண்டும் என்று இப்போதிருந்தே முன்னாள் ஜாம்பவான்கள், வீரர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பேசாம டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ல கேஎல் ராகுலை கீப்பிங் பண்ணவிடுங்க.. என்ன நான் சொல்றது? - சுனில் கவாஸ்கர் பேச்சு! 2

அதில் குறிப்பிடத்தக்கவிதமாக, சுனில் கவாஸ்கர் கேஎல் ராகுலுக்கு ஆதரவாக பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் கேஎல் ராகுல் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். அதிலும் மூன்று இன்னிங்ஸ்களில் 38 ரன்கள் மட்டுமே அடித்தார்.

கேஎல் ராகுல், கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு இன்னிங்சில் கூட 25 ரன்களை கடக்கவில்லை. இதுவரை 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ள கேஎல் ராகுல், வெறும் 35க்கும் குறைவான சராசரி மட்டுமே வைத்திருக்கிறார்.

பேசாம டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ல கேஎல் ராகுலை கீப்பிங் பண்ணவிடுங்க.. என்ன நான் சொல்றது? - சுனில் கவாஸ்கர் பேச்சு! 3

இத்தகைய மோசமான நிலையில் இருக்கும் கேஎல் ராகுலை எதற்காக பிளேயிங் லெவனில் எடுக்கவேண்டும், கீப்பராக விளையாட வைக்கவேண்டும் என்று பலரும் கேள்விகளை சுனில் கவாஸ்கரிடம் கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதில் கூறிய அவர்,

“இங்கிலாந்தில் கேஎல் ராகுலின் பேட்டிங் அணுகுமுறை நன்றாக இருந்திருக்கிறது. கடந்த முறை அங்கு சதம் அடித்திருக்கிறார். இதற்கு முன்னரும் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியிருக்கிறார். ஆகையால் இம்முறை நடக்கும் ஃபைனலில் அவர் விளையாடுவது சரியாக இருக்கும்.

கேஎல் ராகுலை துவக்க வீரராக களமிறக்க முடியாது. ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் கட்டாயம் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். ஆகையால் 5வது அல்லது 6வது இடங்களில் இந்திய அணியின் பேட்டிங் சற்று பின்னடைவாக இருக்கிறது. அங்கு கேஎல் ராகுல் இறக்கினால் அபாரமாக இருக்கும்.” என்றார்.

பேசாம டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ல கேஎல் ராகுலை கீப்பிங் பண்ணவிடுங்க.. என்ன நான் சொல்றது? - சுனில் கவாஸ்கர் பேச்சு! 4

தற்போது ரிஷப் பண்ட் இல்லாத நேரத்தில் கேஎஸ் பரத் கீப்பராக செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் 101 ரன்கள் அடித்தார். இவரது சராசரி 20.29 ஆகும். பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு இவரது செயல்பாடு இல்லை. அதேபோல் கீப்பிங்கிலும் நிறைய தவறுகளை செய்தார்.

கேஎஸ் பரத் அணுகு முறையில் நிறைய பதட்டம் தெரிந்தது. முதல்முறையாக டெஸ்ட் தொடரில் விளையாடுவதால் இப்படி இருந்திருக்கலாம் என்று சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டாலும், இங்கிலாந்தில் நடக்கும் ஃபைனலில் மீண்டும் நடந்தால், அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக முடியலாம் என்றும் மற்றொரு பக்க கருத்துக்கள் வருகின்றன. இவற்றை வைத்துப் பார்க்கையில் கட்டாயம் கேஎல் ராகுல் பைனல் பிளேயிங் லெவனில் விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *