விராட் கோலிய விட சச்சின் தான் பெஸ்ட்.. அப்ப இருந்த பவுலிங், இப்பவும் ஒன்னா – கம்பீர் பேச்சு!

சச்சின், விராட் கோலி இருவரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 45வது ஒரு நாள் போட்டிக்கான சதத்தை பூர்த்தி செய்தார். ஒட்டுமொத்தமாக 73 வது சர்வதேச சதம் ஆகும்.

ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். விரைவில் அந்த சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என பேசப்பட்டு வருகிறது.

தற்போது இலங்கை அணியுடன் அடித்த சதத்தின் மூலம் இந்திய மைதானங்களில் அதிக சதங்கள் அடித்தவர் என்கிற சச்சினின் சாதனையை சமன் செய்திருக்கிறார். இருவரும் இந்திய மைதானங்களில் தலா 20 சதங்கள் அடித்திருக்கின்றனர்.

மேலும் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் தற்போது 9 சதங்களுடன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறி, சச்சினை முறியடித்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 8 சதங்கள் அடித்திருக்கிறார்.

இப்படி எண்ணற்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை விராட் கோலி சமன் செய்வதும் முறியடிப்பதுமாக இருந்து வருகிறார். ஆகையால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு விராட் கோலி பேசப்பட்டு வருகிறார்.

இந்த ஒப்பீடு முற்றிலும் தவறானது. இனிமேல் விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் உடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர். அவர் கூறியதாவது:

சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலத்தில் 30-யார்டு வட்டத்திற்குள் 5 வீரர்கள் நிற்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை. எத்தனை பேர் வேண்டுமானாலும் வட்டத்திற்கு வெளியே நிற்கலாம். ஆகையால் பீல்டிங் மிகவும் கடுமையானதாக இருக்கும். இதனைப் புரிந்து கொண்டால், இனி விராட் கோலியுடன் சச்சின் டெண்டுல்கரை ஒப்பிட்டு பேசாதீர்கள்.” என கௌதம் கம்பீர் கூறினார்.

பலரும் ஒரு பக்கம் சென்றால் கௌதம் கம்பீர் வேறொரு பக்கம் செல்வதே வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, சமகால இந்திய வீரர்களை அவர் விமர்சித்து மட்டுமே வருகிறாரே தவிர, பாராட்டுக்கள் மிகமிகக் குறைவு.  இதனால் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து வருகிறார்.

Mohamed:

This website uses cookies.