ஷிகர் தவான்

இனி ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கக்கூடியது இஷான் கிஷன் மட்டுமே எனது கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னணி துவக்க வீரர் ஷிகர் தவான் நீக்கப்பட்டிருக்கிறார். இளம் வீரர் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மாவுடன் ஒருநாள் போட்டிகளில் இனி சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரில் யார் துவக்க வீரராக களம் இறங்குவார் என்ற விவாதங்கள் எழுந்துள்ளது.

ஷிகர் தவான் டீமுக்குள்ள வரணும்னு கனவுலகூட நினைக்க கூடாது.. இனிமே அந்த பையனுக்கு தான் ஓபனிங் சான்ஸ் - கம்பீர் கருத்து 1

சுப்மன் கில் 2022ஆம் ஆண்டு 12 ஒருநாள் போட்டிகளில் 638 ரன்கள் அடித்திருக்கிறார். அதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கும். அதேபோல் இளம்வீரர் இஷான் கிஷன் வங்கதேசம் அணியுடன் கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். அதை இரட்டை சதமாகவும் மாற்றி, இரட்டை சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். இன்னும் பல சாதனைகளையும் படைத்திருக்கிறார்.

இரண்டு பேரும் போட்டிபோட்டுக் கொண்டு இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வந்திருக்கின்றனர். இவர்களில் யாரை ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக இறக்க வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் துவக்கவீரர் கௌதம் கம்பீர். அவர் பேசியதாவது:

இஷான் கிஷன்

“அது நிச்சயம் இஷான் கிஷன் ஆக மட்டுமே இருக்க முடியும். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதன் காரணமாகத்தான் ஷிகர் தவனை பின்னுக்கு தள்ளி அணியில் இடம் பிடித்திருக்கிறார். அதுவும் 35 ஓவர்களுக்குள் 200 ரன்களை அடிப்பது என்பது அசாத்தியமானது. இதுவரை எவரும் செய்திராத ஒன்று. இப்படி ஒரு வீரர் செய்திருப்பதால் அவரைத் தாண்டி வேறு யாரையும் யோசிக்க முடியாது. கட்டாயம் அவர்தான் துவங்குவார்.

இவ்வளவு அதிரடியாக ஆடக்கூடிய இஷான் கிஷன் நிதானமாகவும் ஆடக்கூடிய வீரர். இரண்டும் கலந்த வீரராக துவக்க வீரரின் இடத்தில் கிடைப்பது மிகச்சிறப்பான ஒன்று. அதை இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவாதத்திற்கு இடம் இன்றி கட்டாயம் இஷான் கிஷன் மட்டுமே ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்குவார். களம் இறங்கவும் வேண்டும்.” என்றார்.

ஷிகர் தவான் டீமுக்குள்ள வரணும்னு கனவுலகூட நினைக்க கூடாது.. இனிமே அந்த பையனுக்கு தான் ஓபனிங் சான்ஸ் - கம்பீர் கருத்து 2

மேலும் பேசிய அவர் சிக்கிருத்தவானின் வயதை கருத்தில் கொண்டு அவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் இல்லையெனில் அவரும் சிறந்த வீரர் தான் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த 10 மாத காலங்களை அவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டு நல்ல அனுபவத்தை பெற வேண்டும் தவானின் இடத்தை நிரப்புவது எளிதல்ல நின்றார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *