இனி வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர்...? புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் வீரர் !! 1

வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர் வைக்கிறதுக்கு சரியான திட்டம் போட்டு கொடுத்த ரவி சாஸ்திரி..

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர், உலகின் அதிக பணம் புழங்கும் போட்டிகளில் ஒன்றாக வலம் வருகிறது.இனி வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர்...? புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் வீரர் !! 2

ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றதால் ஐபிஎல் தொடருக்கான வியாபாரமும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது, பிரண்டிங், விளம்பரம் என அனைத்தையும் போட்டியின் நடுவில் மக்கள் மனதில் கொண்டு சேர்ப்பதற்கு முக்கியமான ஒரு வழியாக ஐபிஎல் தொடர் இருப்பதால், எப்படியாவது இந்த ஐபிஎல் தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை பெற வேண்டுமென்று உலகில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு உரிமத்தை பெற்றுள்ளது.

 

இந்த ஐபிஎல் தொடர் அதிக வியாபாரத்திற்கான இடமாக இருந்தாலும், இதன் மூலம் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமையும் வெளியே தெரிவதற்கு முக்கிய வழித்தடமாக இருப்பதால் இந்த ஐபிஎல் தொடருக்கு உலக அளவிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இனி வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர்...? புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் வீரர் !! 3

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர் நடத்துவது சம்பந்தமாக பேசப்பட்டு வந்தது, ஆனால் அதற்குப்பின் இது சம்பந்தமாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களுடைய ஆக்கப்பூர்வமான கருத்தை தெரியப்படுத்தி வருகின்றனர்.இனி வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர்...? புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் வீரர் !! 4

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிர்ச்சியாளர் ரவி சாஸ்திரி வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர் நடத்தினால் உலகக் கோப்பை தொடர் போன்று நடத்துங்கள் என்று பிசிசிஐக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இனி வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர்...? புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் வீரர் !! 5

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர் நடத்துவதற்கான திட்டத்தை நீங்கள் வைத்திருந்தால் அதை நினைத்து நான் ஆச்சரியப்படவில்லை, குறைவான கிரிக்கெட் போட்டி இருக்கும்பொழுது வருடத்தில் இரண்டாவது பாதியில் ஷாட்டர் ஃபார்மட்டில் ஐபிஎல் தொடரை நடத்தலாம், அதை உலகக் கோப்பை தொடர் போன்று நாக் அவுட் முறையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும், தற்போது பத்து அணிகளாக இருக்கும் இந்த ஐபிஎல் தொடர் எதிர்காலத்தில் 12 அணிகளாக மாறலாம், இதனால் அதற்கு ஏற்றார் போல் இன்னும் 1½முதல் 2 மாதங்கள் அட்டவணையை அதிகப்படுத்தலாம்.இதை அனைத்தையும் செய்வது சாத்தியம்தான்,தேவை இருக்கும்போது அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்,கிரிக்கெட் ஒரு மிக சிறந்த விளையாட்டு,அது மக்களுக்கும்,வீரர்களுக்கு,அதனை வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறப்பவகே உள்ளது, ஐபிஎல் தொடர் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளது என்று ரவி சாஸ்திரி பேசியிருந்தது குறிப்டதக்கது.

பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கே முக்கியத்துவம் கொடுத்து வருவதாக விமர்ச்சனம் இருந்து வரும் நிலையில், வருடத்திற்கு இரண்டு ஐபிஎல் தொடர் என்ற ரவி சாஸ்திரியின் யோசனை இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்குமா..? இல்லை பிரச்சனையை ஏற்படுத்துமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *