இவனெல்லாம் எப்படி ஆஸ்திரேலியாவுக்கு ஆடுறான் ! ஸ்டீவன் ஸ்மித்தை கடுமையாக விமர்சித்த இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி ! 1

இவனெல்லாம் எப்படி ஆஸ்திரேலியாவுக்கு ஆடுறான் ! ஸ்டீவன் ஸ்மித்தை கடுமையாக விமர்சித்த இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி !

ஸ்டீவன் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இருப்பவர். கடந்த பல வருடங்களாக அரங்கிலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக சமகாலத்தில் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபவர் ஸ்டீவன் ஸ்மித் 72 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 7,229 ரன்கள் குவித்திருக்கிறார்.

அதிகபட்சமாக அவரது சராசரி 62 என இருக்கிறது. சமீபத்தில் கடந்த சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் இவர்தான் இந்த அளவிற்கு மரளவைக்கும் சராசரியை வைத்திருக்கிறார். மற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அந்த அளவிற்கு இல்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் தான் மிகப்பெரிய வீரர் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருப்பார். ஸ்ரீமன் 2010ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதன் முதலாக ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

இவனெல்லாம் எப்படி ஆஸ்திரேலியாவுக்கு ஆடுறான் ! ஸ்டீவன் ஸ்மித்தை கடுமையாக விமர்சித்த இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி ! 2

குறிப்பாக அவர் சுழற்பந்து வீச்சாளராக தான் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடர் தான் அவரது மொத்த கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றி போட்டுவிட்டு ஓரளவிற்கு நன்றாக டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் பிடித்து வந்த அவர் திடீரென டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அப்போதிலிருந்து தற்போதுவரை இவர்தான் டெஸ்ட் போட்டிகளில் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அப்போது விராட் கோலி முதலிடத்தை பிடித்து வந்தாலும் ஸ்டீவன் ஸ்மித் ஒரு ஆண் நீண்ட காலத்திற்கு டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் ஸ்டீவன் ஸ்மித் முதன்முதலாக ஆஸ்திரேலிய அணிக்காக கட்டிப்பிடிக்கும் போது இப்படி ஒரு மோசமான பேட்ஸ்மேன் எப்படி ஆஸ்திரேலிய அணிக்காக தேர்வாகி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பது போல் நினைத்ததாக இளம் 22 வயது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் வில் புகோவ்ஸ்கி பேசியிருக்கிறார்.

இவனெல்லாம் எப்படி ஆஸ்திரேலியாவுக்கு ஆடுறான் ! ஸ்டீவன் ஸ்மித்தை கடுமையாக விமர்சித்த இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி ! 3

அவர் கூறுகையில் “ஆஸ்திரேலியா அணிக்காக ஆறாவது இடத்தில் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தார். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அவரிடம் மோசமான டெக்னிக் இருக்கிறது. எப்படி ஆடுவது என்று தெரியாது. ஒரு முட்டாள்தனமான ஆட்டம் இருந்ததை நான் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது .எப்படி இவனெல்லாம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுகிறார். இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான். ஆஸ்திரேலிய அணியில் அவனுக்கு இடம் இருக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் தற்போது அவர் தான் மாபெரும் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இவனெல்லாம் எப்படி ஆஸ்திரேலியாவுக்கு ஆடுறான் ! ஸ்டீவன் ஸ்மித்தை கடுமையாக விமர்சித்த இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *