இளம் வீரர்களுக்கு ஐபிஎல் அனுபவம் உதவும் : தினேஷ் கார்த்திக் 1

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் புதிதாக இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டி அனுபவம் கைகொடுக்கும் என்று மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார்.இளம் வீரர்களுக்கு ஐபிஎல் அனுபவம் உதவும் : தினேஷ் கார்த்திக் 2

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், கோலி, தவன், ரஹானே போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், வாஷிங்டன் சுந்தர், பாசில் தாம்பி, தீபக் ஹூடா ஆகிய இளம் வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனுபவம் குறித்து தினேஷ் மேலும் கூறியதாவது:

இளம் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவத்துடன் சர்வதேச போட்டிகளில் களம் காண்கின்றனர். அவர்களில் சிலர் 20-30 போட்டிகளில் விளையாடியுள்ளனர். முன்பு போல, வாய்ப்பு வரும் வரையில் அவர்கள் போட்டிகளில் விளையாடாமல் தேங்கியிருக்கும் இருக்கும் நிலை தற்போது இல்லை.

இளம் வீரர்களுக்கு ஐபிஎல் அனுபவம் உதவும் : தினேஷ் கார்த்திக் 3
Basil Thampy of the Gujarat Lions reacts during match 42 of the Vivo 2017 Indian Premier League between the Delhi Daredevils and the Gujarat Lions held at the Feroz Shah Kotla Stadium in Delhi, India on the 4th May 2017
Photo by Deepak Malik – Sportzpics – IPL

ஐபிஎல் அனுபவம் அளிக்கும் நம்பிக்கையுடன் சர்வதேச களத்துக்கு வருகிறார்கள். ஆர்வமிக்கதாக இருக்கும் இந்த வாய்ப்பை நிச்சயம் அவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்வார்கள். மூத்த வீரர்கள் என்ற முறையில் நாங்களும் அவர்களுக்கு சில விஷயங்களில் உதவ முயற்சிக்கிறோம்.

இளம் வீரர்களுக்கு ஐபிஎல் அனுபவம் உதவும் : தினேஷ் கார்த்திக் 4
Washington Sundar of Rising Pune Supergiant during match 44 of the Vivo 2017 Indian Premier League between the Sunrisers Hyderabad and the Rising Pune Supergiant held at the Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad, India on the 6th May 2017Photo by Prashant Bhoot – Sportzpics – IPL

ஒருநாள் போட்டியை பொருத்த வரையில் இந்திய அணி சரியான வடிவத்தை அடைந்துள்ளது. எனினும், டி20 போட்டிகளிலும் சரியான வீரர்களுடன் அணியை சமநிலைப்படுத்தும் வகையில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு வீரர்களும், வெவ்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு நிலைக்கிறார்கள் என்பதை அறிய முயற்சிக்கிறோம்.

இளம் வீரர்களுக்கு ஐபிஎல் அனுபவம் உதவும் : தினேஷ் கார்த்திக் 5
Indian cricketer Dinesh Karthik runs between the wickets during the second ODI cricket match between India and New Zealand at The Maharashtra Cricket Association Stadium in Pune on October 25, 2017. / AFP PHOTO / INDRANIL MUKHERJEE / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

பேட்டிங்கைப் பொருத்த வரையில், சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் இடத்தில் களம் காண விரும்புகிறேன். எனினும், எனக்கான பிரதான விருப்பமாக 4-ஆவது வீரராகவே ஆட எண்ணுகிறேன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *