ரிஷப் பண்ட்டை தூக்கிட்டு கேஎல் ராகுல் கீப்பிங் செய்யலாமா? ; கம்பீர் கொடுத்த அட்டகாசமான பதில்!! 1

டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் கீப்பராக செயல்படலாமா? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

டி20 போட்டிகளில் தொடர்ந்து இடம்பெற்று வந்த கேஎல் ராகுல், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பிடிப்பதற்கு தவித்து வந்தார். ஆனால், தற்போது அந்த நிலை மாறி மூன்று போட்டிகளிலும் முன்னணி பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் திகழ்ந்து வருகிறார்.

ரிஷப் பண்ட்டை தூக்கிட்டு கேஎல் ராகுல் கீப்பிங் செய்யலாமா? ; கம்பீர் கொடுத்த அட்டகாசமான பதில்!! 2

குறிப்பாக தவான் இல்லாதபோது துவக்க வீரராக களம் இறங்கி வந்த இவர், முழுநேர துவக்க வீரராகவும் மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். ரோகித் சர்மா இல்லாதபோது டெஸ்ட் போட்டிகளிலும் துணைக் கேப்டனாக இருந்து வருகிறார்.

இந்திய அணியில் ரிஷப் பண்ட் 3 போட்டிகளுக்கும் கீப்பராக இருந்து வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு அவரால் பேட்டிங்கில் செயல்பட முடியவில்லை. கீப்பிங் மட்டுமே வைத்துக்கொண்டு இந்திய அணியில் தொடர்ந்து இடம் கொடுக்க முடியாது என்பதால், அவரை வெளியேற்றிவிட்டு கேஎல் ராகுல் கீப்பராக இருந்தால் சரியாக இருக்குமா?, பண்ட்டிற்கு பதிலாக வேறு ஒரு நல்ல ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனை உள்ளே எடுத்துவந்தால் நல்ல தேர்வாக இருக்குமா? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கௌதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.

ரிஷப் பண்ட்டை தூக்கிட்டு கேஎல் ராகுல் கீப்பிங் செய்யலாமா? ; கம்பீர் கொடுத்த அட்டகாசமான பதில்!! 3

அவர் கூறுகையில், “லிமிடெட் ஓவர் போட்டிகளில் குறைந்த ஓவர்கள் மட்டுமே கீப்பிங் செய்வோம். ஆகையால், கீப்பிங் செய்து விட்டு உடனடியாக துவக்க வீரராக களமிறங்கிட முடியும். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சில நேரம் 100- 150 ஓவர்கள் கீப்பிங் செய்ய வேண்டியதாக இருக்கும்.

அவ்வளவு நேரம் கீப்பிங் செய்து விட்டு உடனடியாக துவக்க வீரராக களமிறங்குவது அவ்வளவு எளிதல்ல. கிட்டத்தட்ட முடியாத காரியமே. ஆகையால், டெஸ்ட் போட்டிகளுக்கு நிரந்தரமாக கீப்பர் ஒருவர் இருக்க வேண்டும். குறிப்பாக அவர் துவக்க வீரராக இல்லாதிருப்பது சரியான தேர்வாக இருக்கும்.

ரிஷப் பண்ட்டை தூக்கிட்டு கேஎல் ராகுல் கீப்பிங் செய்யலாமா? ; கம்பீர் கொடுத்த அட்டகாசமான பதில்!! 4

கேஎல் ராகுல் சிறிது நேரம் கீபிங் செய்து கொள்ளலாம்  ஆனால் முழு நேரம் அவரை கீப்பிங் செய்யச் சொல்வது தவறான முடிவு  மேலும் ரிஷப் பண்ட் பெரிதளவில் எதுவும் தவறு செய்வதில்லை. ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் களம் இறங்குவதால், அடித்து விளையாடுவதற்கு முயற்சிக்கிறார். அது அவரது இயல்பான ஆட்டம். இன்னும் சில வாய்ப்புகள் அவருக்கு கொடுத்தால் சரியாக இருக்குமென நான் உணர்கிறேன்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *