விராட் கோலியால் ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியலையே… சம்பந்தம் இல்லாமல் பேசிய சுரேஷ் ரெய்னா !! 1

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியால் பெரிய தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று கொடுக்க முடியாததை முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ரிஷப் பண்ட், வாசிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, முகமது ஷமி என பல வீரர்களின் கடுமையான போராட்டத்தின் மூலம் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

விராட் கோலியால் ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியலையே… சம்பந்தம் இல்லாமல் பேசிய சுரேஷ் ரெய்னா !! 2

விராட் கோலி இல்லாத நிலையிலும், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதால், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என இந்திய ரசிகர்கள் அனைவரும் உறுதியாக நம்பியிருந்தனர்.

ஆனால் இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிக்கு போராடக்கூட முடியவில்லை, குறிப்பாக போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கத்தில் இருந்தே நியூசிலாந்து அணியின் கையே ஓங்கியிருந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரையும் இழந்தது.

விராட் கோலியால் ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியலையே… சம்பந்தம் இல்லாமல் பேசிய சுரேஷ் ரெய்னா !! 3

இந்திய அணியின் இந்த தோல்வியை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி சமூக வலைதளங்களில் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளானார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரே இந்திய அணி டி.20 உலகக்கோப்பையையாவது ஜெயிக்க வேண்டும் என்றால் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஓபனாக பேசினார்.

கடந்த ஓரிரு வாரங்களாகவே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவும் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

விராட் கோலியால் ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியலையே… சம்பந்தம் இல்லாமல் பேசிய சுரேஷ் ரெய்னா !! 4

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “விராட் கோலி நம்பர் 1 கேப்டனாக இருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன். அவர் நிறைய சாதித்துள்ளார் என்பதை அவரது ரெக்கார்ட்ஸ் சொல்கிறது. அவர் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று நான் கருதுகிறேன். கோலி ஒரு ஐசிசி கோப்பைகூட வெல்லவில்லை என்று நீங்கள் விமர்சிக்கிறீர்கள். ஆனால் அவர் இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையைகூட வெல்லவில்லை. அவருக்கு மேலும் சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

விராட் கோலியால் ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியலையே… சம்பந்தம் இல்லாமல் பேசிய சுரேஷ் ரெய்னா !! 5

மேலும் பேசிய சுரேஷ் ரெய்னா, “இந்திய அணியை சிலர் “chockers” என கிண்டல் செய்கின்றனர், ஆனால் ஏற்கனவே நம்மிடம் 1983ம் ஆண்டுக்கான உலகக்கோப்பையும், 2007ம் ஆண்டுக்கான உலகக்கோப்பையும் உள்ளது, எனவே நாம் chockers கிடையாது. தவறுகள் நடப்பது இயல்பு தான். டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு இந்திய வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியது தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *